என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கிளிக்கு வந்த தடையால் எலி ஜோதிடத்திற்கு மாறிய ஜோதிடர் புதுக்கோட்டையை கலக்கும் வாலிபர்

    புதுக்கோட்டை,  

    வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்களை வீட்டில் வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் பச்சைக்கிளியும் உள்ளது.

    அதன் அடிப்படையில், தற்போது வீட்டில் பச்சைக்கிளியை வளர்த்து வந்த நபர்கள் மற்றும் பச்சை கிளியை வைத்து சோசியம் பார்க்கும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் உள்ள பச்சைக்கிளிகளை வனத்துறையினர் ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஏராளமான நபர்கள் தாங்கள் வீட்டில் வளர்த்து வரும் பச்சைக்கிளியை வனத்துறையினரிடம் ஒப்படைத்து வரும் சூழலில், பச்சைக்கிளியை நம்பி கிளி ஜோசியம் பார்த்து வந்த பலர் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில், 30 வருட காலமாக பச்சைக்கிளியை வைத்து சோசியம் பார்த்து வந்த ஒரு நபர் "நீங்க, எங்க கிளியை தானே எங்கிட்ட இருந்து பறிப்பீங்க…, நாங்க எலியை வைத்து சோசியம் பார்ப்போம்…" என புதுவிதமான முயற்சியில் இறங்கி தற்போது வெள்ளெலியை வைத்து ஜோசியம் பார்த்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் இருந்து கடியாபட்டி ெ சல்லும் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தீனதயாளன் (வயது35) என்பவர் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவர் வைத்திருந்த கூண்டில் கிளிக்கு பதில் வெள்ளெலி வைத்து ஜோதிடம் பார்த்து வந்தார்.

    இது குறித்து நம் நிருபரிடம் தீனதயாளன் கூறியதாவது:-

    கிளி வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னிடமிருந்த 2 கிளிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்துவிட்டனர். வேறு தொழில் தெரியாததால் வெள்ளெலியை வைத்து ஜோதிடம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக கொடைக்கானல் சென்று அங்கிருந்த ஒருவரிடம் வெள்ளெலியை வாங்கி வந்து சீட்டு எடுத்து கொடுக்க பயிற்சி அளித்தேன். அது நன்றாக பயிற்சி பெற்றதும் தொழிலை தொடங்கினேன். ஜோதிடம் பார்ப்பதைவிட எலி சீட்டு எடுப்பதை வேடிக்கை பார்க்கவே ஏராளமானோர் வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கோவில் கட்ட வசூலித்த ரூ.11 லட்சம் கொள்ளை

    புதுக்கோட்டை,  

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி புரம் வீதியில் சொந்தமான 100 ஆண்டு பழைமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது.

    அவ்வப்போது அரிமளத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதை வைரவன் வழக்கமாக வைத்துள்ளார்.

    அரிமளம் அருகே இசுகுப்பட்டி கிராமத்தில் வைரவன் குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் கோவில் கட்டுவதென்று வைரவன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதற்காக பணம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வைரவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே ெசன்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிகிடந்துள்ளது. வீட்டில் அறையில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.11 லட்சம் மற்றும் விைல உயர்ந்த பெருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசில் வைரவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் சிசிடிவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

    மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்

    ஆலங்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1 8 வகுப்பறையுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளிடம் அவர் பேசுகையில்:-

    மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டப்பட உள்ளது. சுமார் 50 ஆண்டு காலத்திற்கு கட்டிடம் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கட்டப்படும். மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வகுப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு நல்ல முறையில் படித்து உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ரவி, ஊராட்சி தலைவர் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணி, சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருண் ஜார்ஜ், வெங்கடேஷ், ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரு தினங்களுக்கு முன்பு வல்லம் அருகே நாட்டாணி பகுதியில் வசிக்கும் பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபு பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்புசாமியுடன் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொசுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சர்மிளா (வயது 22). சில ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார்.

    அதன் பின்னர் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து சென்றுவிட்டார்.

    இதனால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சர்மிளா 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை தச்சாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனது தாய்மாமன் பிரபு வீட்டுக்கு வந்து செல்வார். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தச்சான்குறிச்சிக்கு வந்தார்.

    பின்னர் தாய்மாமன் பிரபு வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்ல ஆயத்தமானார்.

    இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வல்லம் அருகே நாட்டாணி பகுதியில் வசிக்கும் பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பிரபு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது சர்மிளாவும் உடன் சென்றார்.

    பின்னர் பிரபு வீடு திரும்பிய நிலையில் சர்மிளா நாட்டாணியில் தங்கியிருந்தார்.

    நேற்று இரவு சர்மிளா தனது தாய் மாமன் பிரபுவிற்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

    அப்போது பிரபு பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்புசாமியுடன் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அதிக மது போதையில் இருந்ததால் தனது நண்பர் கருப்புசாமியிடம் தங்கை மகளை அழைத்து வர சொல்லி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பினார்.

    பின்னர் கருப்புசாமி நாட்டாணி சென்று சர்மிளாவை அழைத்து கொண்டு தச்சான்குறிச்சி ஓட்டிச் சென்றார்.

    வல்லம் அருகே சென்னம்பட்டி காட்டுப்பகுதிக்கு சென்றபோது மது போதையில் இருந்த கருப்புசாமியின் குணம் மாறியது.

    மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதியில் சாலையோரம் திடீரென நிறுத்தினார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தி இருக்கலாம் என சர்மிளா கருதினார்.

    ஆனால் எதிர்பாராத வகையில் கருப்புசாமி சர்மிளாவை அலேக்காக தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா கூச்சலிட்டார். ஆனால் கருப்பு சாமியின் மிருகப் பிடியிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.

    பின்னர் சர்மிளாவை அவர் கற்பழித்தார். பின்னர் போலீசில் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என கருதிய கருப்பசாமி அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.

    இந்த நிலையில் வெகு நேரமாகியும் சர்மிளா திரும்பி வராததால் சந்தேகமடைந்த பிரபு, கருப்புசாமி செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

    அப்போது எதிர் முனையில் பேசிய கருப்புசாமி தன்னையும், சர்மிளாவையும் ஒரு கும்பல் தாக்கிவிட்டு, அவரை காட்டு பகுதிக்கு தூக்கி சென்றதாக கூறியுள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபு, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர் கருப்புசாமியுடன் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு சென்று சர்மிளாவை தேடினார்.

    அப்போது அங்கு சர்மிளா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு நிலைகுலைந்தார்.

    பின்னர் இது பற்றி வல்லம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சர்மிளாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர் கருப்புசாமியிடம் உரிய முறையில் விசாரணை நடத்திய போது, சர்மிளாவை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் வல்லம் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் கட்ட சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி புரம் வீதியில் சொந்தமான 100 ஆண்டு பழைமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது.

    அவ்வப்போது அரிமளத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதை வைரவன் வழக்கமாக வைத்துள்ளார்.

    அரிமளம் அருகே இசுகுப்பட்டி கிராமத்தில் வைரவன் குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் கோவில் கட்டுவதென்று வைரவன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதற்காக பணம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வைரவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. வீட்டில் அறையில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.11 லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசில் வைரவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

    • சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உலக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இச்சம்பவத்தில் தனது கணவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ராமச்சந்திரனின் மனைவி ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ கடையில் பணிபுரிந்த சக தொழிலாளர்களான நாரணமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (33), மணல்மேல்குடி நரியனேந்தலை சேர்ந்த ரங்கய்யா (24) ஆகியோர் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சுப்பிரமணியன், ரங்கையா ஆகியோர் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர். கடந்த தீபாவளி அன்று இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பாடகர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதை தொடர்ந்து அவரை தாக்கியதாக 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி(பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில அவதூறாக பேசுவது), 324 (ஆயுதத்தால் தாக்குவது), 341(வழிமறித்து தடுப்பது) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு விளக்க மோட்டார்சைக்கிள் பேரணி ஆலங்குடி வந்தது

    ஆலங்குடி, 

    தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் பேரணியாக தமிழகம் ம்ழுவதும் சென்று கட்சியினர், தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள்.

    பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். 188 மோட்டார் சைக்கிள்களில் பேரணி தொடங்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் 15 நாட்களில் 8647 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு 504 இடத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது. நவம்பர் 27-ம் தேதி சேலம் சென்றடைகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி தொகுதியில் சுப்பிரமணியபுரம், கீரமங்கலம், கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வருகைதந்த இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் தி.மு.க.வினர் திரளாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அருவடிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி நகர செயலாளர் பழனிக்குமார், துணைச் செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டிமுருகன், சையது இப்ராகிம், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் 28-ந் தேதி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கோட்ைட நோக்கி பேரணி

    கந்தர்வ கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் வட்டார அளவிலான ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோவின் ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர்கள், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் வட்டாரச் செயலா ளர் சண்முகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலா ளர் முத்துக்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொருளாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் தெட்சண மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் சேகர் அனைவரையும் வரவேற் றார். கந்தரவக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஒன்றிய தலைவர் ரவி, செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    வருகிற 24-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்க ளில் மறியல் போராட்டமும், டிசம்பர் 28-ந் தேதி சென்னை யில் லட்சக்கணக் கான அரசு ஊழியர், ஆசிரி யர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போரா ட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்ச ரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை ஒன்றி யத்தின் சார்பில் அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை வழக்கு

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர். கடந்த தீபாவளி அன்று இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பாடகர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரை தாக்கியதாக 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி(பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் அவதூறாக பேசுவது), 324 (ஆயுதத்தால் தாக்குவது), 341(வழிமறித்து தடுப்பது) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னமராவதி நெல் மண்டியில் ரூ.3 லட்சம் திருட்டு நடைபெற்று உள்ளது
    • கண்கா ணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

    பொன்னமராவதி,

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்கா கோட்டை யூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலமு ருகன் (வயது 51).இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதிக்குட்பட்ட காட்டுப்பட்டி ஊராட்சி தெய்வானைநகர் எதிரே புதுக்கோட்டை செல்லும் சாலையில் நெல் கமிஷன் மண்டி அமைத்து வியாபா ரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் மகன் திருமணத்திற்கு பத்திரிகை வைப்பதற்காக பாலமுருகன் வெளியூர் சென்றதால், அவரது மகள் சண்முகப்பி ரியா கடையை பார்த்து வந்தார்.சண்முகப்பிரியா வியா பாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.வழக்கம் போல் காலை யில் கடையை சண்முகப்பி ரியா கடையை திறந்துள்ளார். அப்போது கடையில் இருந்த கல்லாபெட்டி உடைக்கப்ப ட்டும், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவாகும் பெட்டியும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும் கல்லாவில் இருந்த ரூ.3 லட்சத்தையும், ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.இது குறித்து அவர் பால முருகனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதை யடுத்து பாலமுருகன் கடைக்கு வந்து பார்வையிட்டார்.பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் பொன்னம ராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமை யில் காவல் உதவி ஆய்வா ளர் மணிகண்டன், காவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப் பட்டது.மேலும் அப்பகுதியில் உள்ள டைகளில் கண்கா ணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் ரூ. 3 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடிவரு கின்றனர். இந்த கொள்ளை சம்ப வம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×