என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை உழவர் சந்தையில் பழமையான வாகை மரம் வெட்டப்பட்டுள்ளது
- சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள பழமை வாய்ந்த வாகை மரம் திடீரென வெட்டப்பட்டுள்ளது. இதற்கு மரம் வளர்க்கும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் மரங்களை இனி யாரும் வெட்டாமல் இருக்க , மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது
- மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குன்றா ண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஊராட்சி ஒன்றி யம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுக்கோட்டை நகராட்சி தர்மராஜ் பிள்ளை து வக்கப்ப ள்ளி ஆகிய 3 சத்து ணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றி தழ்களை, மாவட்ட க லெக்டர் மெர்சி ரம்யா வழ ங்கினார். பின்னர் மா வட்ட கலெக்டர் தெரி வித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தர்மராஜ் பிள்ளை நகராட்சி து வக்கப்ப ள்ளி ஆகிய 3 பள்ளி களின் சத்துணவு மை யங்களுக்கு, தமிழக அர சால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை தணிக்கை அலுவலரால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொ ள்ளப்பட்டது.
மேலும் இப்பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள உணவு கூடங்களில் சுடுதண்ணீர் வசதி, உணவு வெப்பமானி, ஜன்னல்களில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள், உணவு பாதுகாப்பு அங்கீகா ரம், தொற்றில்லா சான்றிதழ், காய்கறி தோட்டம் உள்ளிட்டவைகளை கடைப்பி டிக்கப் பட்டுள்ள தை கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் மேற்கண்ட 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ.தரச்சான்றுகள் வழங்கப்பட்டது.
மேலும் இதுபோன்று அதிகளவில் தரச்சான்று பெற்ற பள்ளி சத்துணவு மையங்களாக இம்மா வட்டத்தை மாற்றிட தொடர்புடைய அலுவ லர்கள் நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சென்னை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன முதன்மை த ணிக்கை அலுவலர் கார்த்தி கேயன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெயராமன், மாவட்ட சத்துணவு பிரிவு உதவியாளர் சிவராஜன், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாண்டிசெல்வி போஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்
பேபிராணி, நகராட்சி ஆணையர் (பொ) முகமது இப்ராஹிம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவண பவா நந்தம் (அரிமளம்), சண்முகாதேவி (குன்றாண்டார்கோவில்), உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவிப் பொறியாளர் கலியமுத்து, சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி சாதனை
- மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவர் சிறந்த வீரராக தேர்வு
புதுக்கோட்டை,
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி மண்டல அளவில் கால்பந்து போட்டி பிஷப் தேவ தாஸ் அம்புரோஸ் வித்யாலயா சீனியர் செ கண்டரி பள்ளியில் நடை பெற்றது.இதில் 39 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மவுண்ட் சீயோன் சர்வ தேசப் பள்ளி மாண வர்கள், கலந்து கொண்டு, மூன்றா மிடம் பிடித்து சாதனை படைத்தனர். 9-ம் வகுப்பு மாணவன் விஜய் மல்லை யப்பன் இந்த தொடரில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார்.இப்போட்டிக்கு பள்ளி யில் இருந்து 16 மாண வர்களை கொண்ட குழு விற்கு குறுகியகாலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்க ளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும்,பயிற்சியாளருமான ரூடவ்ஸ்வரன்யும், பள்ளி யின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்த லைவர் ஏஞ்சலின் ஜோ னத்தன், பள்ளியின் முதல்வர் ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர்.
- கந்தர்வகோட்டையில் நெற்பயிரில் இலைசுருட்டு, குருத்து பூச்சி தாக்குதல் ஏற்பட தொடங்கி உள்ளது
- உதவி இயக்குனர் தலைமையில் வேளாண் துறையினர் ஆய்வு
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை வட்டா ரத்தில் நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ள பட்டது. தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலை காரணமாக நெல்பயிரில் இலைசுருட்டு புழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு வேளாண்மை உதவி இயக்குநர்அன்பரசன் தலைமையில் வேளாண் துறை களப்பணியாளர்கள் துவார், அக்கச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- கறம்பக்குடி அருகே அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
- விடுமுறை தினத்தில் நடந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
கறம்பக்குடி, கறம்பக்குடி அருகே
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 850- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறை களை கொண்ட 2 மாடி கட்டிடம் உள்ளது. தரமற்ற நிலையில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுக ளாகவே பழுத டைந்து ஆங்காங்கே வெ டிப்புகளுடன் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இருந்தது. இருப்பினும் மாணவர்கள் அந்த கட்டிடத்தில் தொ டர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமு றை முடிந்து மாணவர்கள் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். அப்போது 9 மற்றும் 10-ம் வகுப்பு அறை கட்டிடத்தில் மேற்கூரை பெயர்ந்து சிமெண்ட் பூச்சுகள் வகுப்ப றைக்குள் சிதறி கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர் . இதை யடுத்து மாணவர்கள் வேறு வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை விடு முறை தினத்தில் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ப ட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் விடுமுறை தினத்தில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெய ர்ந்து விழுந்ததால் அசம்பா விதங்கள் இன்றி மாணவர்கள் உயிர் பிழைத்த னர்.ஆனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழலாம் இதேபோன்று கடந்த ஆண்டும் நவம்பர் மாத காலத்தில் பருவமழையின் போது இந்த பள்ளி கட்டிடம் மேல் கூரை இடிந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை. மிகுந்த அச்சத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகி றோம். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் மற்றும் மாணவர்க ளும் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை,
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் கிராமத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி மற்றும் செங்கல்பட்டு கற்பக விநாயகா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் அண்ணாமலை ரகுபதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் ராஜசேகர பாண்டியன் செய்திருந்தார். இதில் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் கியூ ஆர் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்டது.புதுக்கோட்டை
- வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெருந்துறை:
உத்தரபிரதேசம் மாநிலம் பர்க்காபாத் மாவட்டம் ஆவாஸ் விகாஸ் பகுதியை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 48).
இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார். மேலும் அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஹோமாலினி. இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அமித் குமார் கடந்த 10-ந் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலம் பர்க்காபாத் மாவட்டம் ஆவாஸ் விகாஸ்க்கு சென்று விட்டார்.
இதையடுத்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வள்ளிபுரத்தான் பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதை தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பொருட்களின் மேல் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதனால் கொள்ளையர்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க அவர்கள் மிளகாய் பொடி தூவி சென்று இருக்கலாம் என தெரிகிறது.
மேலும் அங்கு வைத்து இருந்த 4 பவுன் தாலி செயின், 2 பவுன் வைர தாலி செயின், 2 பவுன் காது தோடு செட், ஒன்றரை பவுன் மோதிரம் என மொத்தம் ஒன்பதரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு தகவல்கள் சேரிக்கப்பட்டன. அதே போல் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் கொள்ளையர்கள் மிளகாய் பொடி தூவி விட்டு சென்று உள்ளதால் அவர்கள் திட்டம் போட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகக்கபடுகிறது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
- இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த டிராலி பேக்கில் பல்வேறு வடிவங்களில் மறைத்து முலாம் பூசி தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம் 322 கிராம் எடைகொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 17 ஆயிரத்து 718 ஆகும்.
இதேபோல் ஏர் இந்தியா விமானம் ஒன்று துபாயில் இருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது ஒரு பயணி கொண்டு வந்த உடமைகளுக்கு நடுவே கார் ஸ்பீக்கர், இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 857 கிராம் எடை உள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.51 லட்சத்து 84 ஆயிரத்து 850 ஆகும். 2 கடத்தல் சம்பவங்களிலும் தொடர்புடைய பயணிகளிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- காயம் அடைந்த இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா, நவீன் மற்றும் இவர்களது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் பாட்டில்கள், கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- வருகிற 1-ந் தேதி கடைசி நாள் என அறிவிப்பு
புதுக்கோட்டை, நவ.20-
புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்த்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்–கங்–கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு அச்சகம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற 1-ந்தேதி அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு 24.12.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்–ப–வர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்–டணம் செலுத்தியதற்கான ரசீதினை புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்–ணப்–பிக்கலாம்.
மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://www.drbpdk.in வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- கிராமிய பாடகரை தாக்கிய வழக்கில் கறம்பக்குடி வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- மழையூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா, நவீன் மற்றும் இவர்களது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் பாட்டில்கள், கம்பிகளால் தாக்கியுள்ளனர்.இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர்.இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் நிறைவுவிராலிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்
- திரளான பக்தர்கள் குவிந்தனர்
விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு மலைமேல் முருகன்-வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருகன்- வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் காலை மற்றும் மாலையில் நடைபெற்றது. மேலும், நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகபெருமான்-வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனிடம் முருகபெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் அதன் பின்னர் இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது விராலிமலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' பக்தி கோஷம் விண்ணை பிளந்தது.
அதனை தொடர்ந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பால், இனிப்பு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். இவ்விழாவின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏதும் நடக்காத வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 13 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்வுக்கு பின்னர் நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று முருகப்பெருமான திருக்கல்யாண கோலத்தில் தரிசிப்பது மிகவும் விசேசமானது.
இதனால் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். முன்னதாக சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நாளை (திங்கட்கிழமை) முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண ஊர்வலமும் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளியறை ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழாவானது நிறைவு பெறுகிறது.
இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






