search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FASTIVAL"

    புதுக்கோட்டை கருணாநிதி நூற்றாண்டு விழா

    புதுக்கோட்டை,

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் கிராமத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி மற்றும் செங்கல்பட்டு கற்பக விநாயகா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் அண்ணாமலை ரகுபதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் ராஜசேகர பாண்டியன் செய்திருந்தார். இதில் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் கியூ ஆர் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்டது.புதுக்கோட்டை

    • கரூர் அரசு மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா
    • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஷாலினி பிரியா இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.அரசு மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவி ஷஸ்மினாபானு வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி பிரியா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி திவ்ய தர்ஷினி விழாவினை தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜலிங்கம், சங்கீதா, சண்முகப்பிரியா, நந்தினி, ரம்யா, சஷ்டிகா ஆகியோர் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

    • பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலி சோடா அறிமுக விழா நடைபெற உள்ளது
    • விக்கிரமராஜா 4-ந்தேதி தொடங்கிவைக்கிறார்

    திருச்சி.

    மதுரையில் பேஞ்ஜோஸ் குளிர்பானத்தின் மற்றொரு அறிமுகமாக பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலி சோடா அறிமுக விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைக்கிறார்.

    திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு 25 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குளிர்பானங்கள் முதலில் கண்ணாடி பாட்டிலிலும், 2017-ல் பெட் பாட்டிலிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது மற்றொரு அறிமுகமாக பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலி சோடா குளிர்பானங்கள் அறிமுக விழா மதுரை சிக்கந்தர் சாவடி, அலங்காநல்லூர் மெயின்ரோடு, ஜெயசுதா மஹால் 4-வது மாடியில் நாளை மறுநாள் (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமை தாங்குகிறார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவரும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய முதன்மை துணைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக கிருஷ்ணா பேவரேஜஸ் உரிமையாளர் ஜானகி ரவிச்சந்திரன், ஹரிபிரசாத் ஆகியோர் வரவேற்று பேசுகிறார்கள். புதிய அறிமுகமாகும் கோலிசோடா பெட் பாட்டில் முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல் தலைவர் டி.செல்லமுத்து முதல் விற்பனையை தொடங்கிவைக்க அதனை கருப்பு ராஜா ஜெயசுதா பெற்றுக்கொள்கிறார்.

    அதபோல் கோலிசோடா கண்ணாடி பாட்டில் முதல் விற்பனையை வீரையா வேளார் பெற்றுக்கொள்கிறார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவரும் வி.ஜெ.ஆர்.எண்டர் பிரைசஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.கிருஷ்ணன், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களுக்கு ஏரியா வாரியாக ஏஜெண்டுகள் தேவை என்றும், தரமான குளிர்பானங்களை வழங்கிவரும் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து நல்லாதரவு தர வேண்டுகிறோம் என்றார். நிறைவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மொத்த விற்பனையாளர் வி.கே.ஆர்.தாமோதரன் நன்றிகூறுகிறார்.

    • தேசிய நூலக வார விழா நடைபெற்றது
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    திருச்சி

    திருச்சி மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா புலவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சிவலிங்கம் , கோபால கிருஷ்ணன், அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, தூயமரியன்னை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வாசகர்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நூலகத்தில் உறுப்பினராக இணைவதற்கு மோகன் மற்றும் திருமலை மதியழகன், சிவகுமார் ஆகியோர் நன்கொடை தொகை வழங்கினர். விழா முடிவில் ஆலத்தூர் நூலகர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தினவிழா மற்றும் போட்டிகளில் வெற்றிப்பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து முன்னாள் பிரதமர் நேரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் காரணம் குழந்தைகளை கண்டால் நம் மனதில் உள்ள துன்பங்கள் மறைந்து போகின்றன. சாதிப்பதற்கான காலங்கள் குறைவாக இருந்த காலத்திலேயே நாட்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குறிப்பாக ஜவஹர்லால் நேரு, காந்தி, நேதாஜி, பட்டேல் போன்றோர் சாதனைகள் பல கண்டு சரித்திரத்தில் நிலைத்து நிற்கின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளும், அதற்கான வழி காட்டிகளும் எண்ணிலடங்கா உள்ளன. அதனை பயன்படுத்தி மாணவர்கள் அனைவரும் தேவையற்றவற்றை விடுத்து சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.

    விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், செல்போனின் தீமையினை விளக்கும் விழிப்புணர்வு நாடகமும் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
    • அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் 41-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி உற்சவ அம்மனுக்கு நேற்று முன்தினம் மதுரகாளியம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரை மீனாட்சி அலங்காரமும், இன்று (புதன்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 30-ந்தேதி துர்க்கை அலங்காரமும் நடக்கிறது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 2-ந் தேதி மாரியம்மன் அலங்காரமும், 3-ந் தேதி லட்சுமி அலங்காரமும் நடக்கிறது.

    இதையடுத்து, 4-ந்தேதி சரஸ்வதி அலங்காரமும், 5-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் தினமும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்

    • மூக்கணாங் குறிச்சியில் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
    • மாடுகளுக்கு எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் அருகேயுள்ள மூக்கணாங்குறிச்சியை அடுத்த தொட்டியப்ப ட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் திருவிழாவும், மாடுகள் மாலை தாண் டும் விழாவும் நடைபெறும். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

    3ம் நாளான நேற்று எருது ஓட்டம் எனப்படும் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதில் கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகள் அழைத்து வரப்பெற்றிருந்தன. வழிபாட்டுக்கு பிறகு சுமார் 3 கி.மீட்டர் தூரம் எருதுகளை ஓட்டி சென்று அங்கிருந்து மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. முதல் 3 இடங்களை பெற்ற மாடுகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது.

    ×