கறம்பக்குடியில் கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு

காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடியில் கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு
Published on

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர். கடந்த தீபாவளி அன்று இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பாடகர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரை தாக்கியதாக 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி(பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் அவதூறாக பேசுவது), 324 (ஆயுதத்தால் தாக்குவது), 341(வழிமறித்து தடுப்பது) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com