என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ராஜசேகா் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
    • ராஜசேகா் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

    ஊட்டி,

    ஊட்டி ஸ்டேன்ஸ் சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக, திண்டுக்கல் மாவட்டம், சீதப்பாடியைச் சோ்ந்த ராஜசேகா் (வயது 31) என்பவரை போலீசார் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் திடீரென் தலைமறைவானார். எனவே அவரை கைது செய்ய ஊட்டி குற்றவியல் நீதி மன்றம் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் உத்தரவின்படி தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ராஜசேகர் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம், ராஜமுந்திரிக்கு சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த ராஜசேகரை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தனா்.

    அதன்பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ராஜசேகர் மீது ஊட்டி மட்டுமின்றி திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்டத்திலும் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
    • பூக்கள் மலா்ந்ததும் அந்த பூந்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுமார் ஒரு மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் அங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஊட்டியில் கோடை சீசன் முடிவுக்கு வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் 2-வது சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது அங்கு இதமான காலநிலை நிலவும். இதனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு திரண்டு வந்து செல்வர்.

    எனவே ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை தொடங்குவது என்று அரசு தோட்டக்கலை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும்விதமாக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித் பூங்காவில் மலர் நாற்றுகள் நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அப்போது ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், ஊட்டி நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    நீலகிரியில் 2-வது சீசன் பணிகள் தொடங்குவது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலாமேரி கூறியதாவது:-

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப், புனே, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து இன்கா, மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டா், வொ்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுணியா போன்ற 60 வகை மலர் விதைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

    அதுவும்தவிர ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 4 லட்சம் மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் 15 ஆயிரம் மலா் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, லில்லி, ஆலந்தூரியம் போன்ற 30 வகை மலா் செடிகளை நடவு செய்யும் பணி தொடங்கி விட்டது.

    அவற்றில் பூக்கள் மலா்ந்ததும் அந்த பூந்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுமார் ஒரு மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இது சுற்றுலா பயணிகளின் கண்கள் மட்டுமின்றி மனதுக்கும் விருந்தளிப்பதாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
    • 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    குன்னூர்,

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தனர். அங்கு உள்ள தேவாலயங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி, சமாதானம் நிலவ வேண்டி குன்னூர் பெட்போர்டு பகுதியில் அமைதி ஜெப பேரணி நடத்தப்பட்டது. இதில் அனைத்து திருச்சபைகளைும் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் சமாதானம், பாதுகாப்பிற்காக மத்திய அரசு நல்ல முடிவெடுத்து அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று திருச்சபை தலைவர்கள் பேரணியில் கோரிக்கை விடுத்தனர். குன்னூர் பெட்போர்டு பகுதியில் தொடங்கிய பேரணி மவுண்ட் ரோடு வழியாக குன்னூர் அந்தோணியார் ஆலயம் வந்தடைந்தது.

    • 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.
    • விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    கோத்தகிரி அடுத்த சிறியூர் கிராமத்தில் பழங்குடியின பெண்களுக்கான மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தியது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர்கள் வடிவேலன், கவுரம்மா, கோமதி சானீஸ், தீபாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மாதவிடாய் மற்றும் மகப்பேறு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன், மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன் மற்றும் ஊர் தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி நிர்வாக செயலாளர் பிரியங்கா நன்றி கூறினார்.

    • குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.
    • கழிவுநீர் பொங்கி நிரம்பி பள்ளிக்குள் வழிந்தோடுகிறது.

     ஊட்டி,

    ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இதன் அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், ஊட்டி நகர்ப்புற வாழ்வாதார மையம் ஆகியவை உள்ளன.இந்த பகுதியில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இதில் குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அகற்றப்படாமல் உள்ளது.எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள், பாதாள சாக்கடையில் நிரம்பி அடைப்பை ஏற்படுத்தி உள்ளன.இதனால் அங்கு கழிவுநீர் பொங்கி நிரம்பி பள்ளிக்குள் வழிந்தோடுகிறது. எனவே அங்கு துர்நாற்றம் வீசுகின்றது.இதற்கிடையே குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள விளையாட்டு மைதானம் சரிவர பராமரிக்கப்படாததால், அங்கு புல் மற்றும் செடிகள் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் அப்பர்பஜாரில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளியில் அனைத்து குறைபாடுகளையும் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார்.
    • பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியி ட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார். அன்றுமுதல் தமிழ்நாடு நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை நடக்க உள்ளது.

    ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் பேரணி, கமர்ஷியல் சாலை வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முடிகிறது.

    இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்து றை சார்பில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட உள்ளது.

    இது நாளை முதல் வருகிற 23ந்தேதிவரை 5 நாட்கள் நடக்கும். இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    • நீலகிரியில் 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் வந்த ஒரு சுற்றுலா வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், டம்ளர்கள், உணவு தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து அந்த பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    • மரம் விழுந்து 2 மணி நேரத்தை தாண்டியும் அகற்றப்படாமல் சாலையின் நடுவிலேயே கிடந்தது.
    • ராட்சத மரம் விழுந்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்திற்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை என 2 சாலைகள் செல்கின்றன.

    இந்த சாலைகளில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மாவட்டத்திற்கு செல்லும் போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையும், மலையில் இருந்து கீழே இறங்கும் போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையையும் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இன்று அதிகாலையும் வழக்கம்போல கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அதிகாலை 5 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் திடீரென முறிந்து சாலை யின் நடுவே விழுந்தது.

    அதிர்ஷ்டவசமாக அந்த சமயம் வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. மரம் முறிந்து விழுந்தால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் வாகனங்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் வாகனங்கள் நகரமுடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.

    மரம் விழுந்து 2 மணி நேரத்தை தாண்டியும் அகற்றப்படாமல் சாலையின் நடுவிலேயே கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பழங்குடியின மக்கள் தாங்களாகவே முன்வந்து, சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு வாகன ஓட்டிகளும் உதவினர். இதை யடுத்து பழங்குடியின மக்க ளும், வாகன ஓட்டிகளும் சேர்ந்து மரத்தை அகற்றி சாலையின் ஒருபுறம் வழியாக வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர்.

    2 மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து சென்று கொண்டிருக்கி ன்றன. இருந்த போதிலும் மரம் முற்றிலும் அகற்ற ப்படா தால் சிரமத்து டனேயே பயணித்து வருகி ன்றனர். எனவே தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினர் விரைந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் அசுர வேகத்தில் பயணிக்கின்றன.

    கோத்தகிரி சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அபாயகரமான வளைவுகள் உண்டு. எனவே அங்கு செல்லும் உள்ளூர் வாகனங்கள் வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனத்துடன் செல்லும். ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், அபாய வளைவுகள் இருப்பதை அறியாமல், அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேட்டுப்பாளையம்- கோத்தகிரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் பஸ் மூலம் சுற்றுலா வந்தனர்
    • குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முத்தப்பாளையம் பகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் இருந்து 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் மினி பஸ் மூலம் சுற்றுலா வந்தனர். அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர்.

    குன்னூர் அடுத்து காட்டேரி பகுதியில் வேன் சென்றது. அப்போது ஓடும் பஸ்சில் டிரைவர் குழந்தைசாமிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இந்த பஸ் ஒருவேளை மாற்று திசையில் திருப்பி இருந்தால், சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும். அதிர்ஷ்ட வசமாக தடுப்பு சுவரில் வாகனம் மோதியது. இதனால் வண்டியில் இருந்த 22 பேர் உயிர்தப்பினர்.சுற்றுலா பஸ் டிரைவருக்கு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேயிலைக்கு உரிய நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது.

    ஊட்டி:

    மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதன் ஒரு பகுதியாக அவர் எல்லநள்ளி பகுதியில் உள்ள சற்குரு ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஊர்மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் மற்றும் ஊர் தலைவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டன. குறிப்பாக நீலகிரி தேயிலைக்கு உரிய நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இது குறித்து ஏற்கனவே மத்திய மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மத்தியஅரசு வெகுவிரைவில் சிறப்பான முடிவை அறிவிக்கும் என உறுதியளித்தார். அதன்பிறகு அவர்களுக்கு மத்திய அரசின் சாதனை விளக்க கையேடு வழங்கப்பட்டது.

    அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பாரதிய மஸ்தூா் சங்க (பி.எம்.எஸ்.) ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டாா். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது. ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது பெருமைக்குரிய நிகழ்வு. இதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான கலாசாரம், கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வழிவகை ஏற்பட்டு உள்ளது. ஜி 20 மாநாடுகள் மூலம் நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பாராளுமன்ற தோ்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீா்களா என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த எல்.முருகன், நான் எங்கு போட்டியிடுவேன் என்பது குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

    • 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஜெயில்ஹில் குடியிருப்பில் அரசு ஊழியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக துப்புரவு பணியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

    இதனால் அங்கு உள்ள பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் போக வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும் வனவிலங்குகள் அச்சுறுத்துகின்றன.

    ஊட்டி நகரத்தின் மைய பகுதியில் உள்ள ஜெயில் ஹில் பகுதி, பராமரிப்பின்றி புதர்காடுகளாக மாறி கிடப்பது அங்கு வசிக்கும் பொதுமக்களை வேதனைப்படுத்தி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஜெயில்ஹில் பகுதியில் உள்ள சாலைகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை உடனடியாக வெட்டி அகற்றி, பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×