என் மலர்
நீலகிரி
- சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாளாக தொடா்ந்து கன மழை பெய்துவருகிறது.
இதனால் கூடலூா்- மைசூா் ரோட்டில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் நின்ற மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தமிழகம், கா்நாடகம், கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மூங்கில் தூா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.
இதனால் அங்கு 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- சுமார் 2 வயது மதிக்கத்தக்க கன்றுகுட்டி, சிறுத்தை தாக்கி இறந்தது உறுதிசெய்யப்பட்டது.
- கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கெங்கரையை சேர்ந்த விமலா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி இட்டக்கல் பகுதியில் சிறுத்தை தாக்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்த வனத்துறை அதிகாரி ராம்பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது சுமார் 2 வயது மதிக்கத்தக்க கன்றுகுட்டி, சிறுத்தை தாக்கி இறந்தது உறுதிசெய்யப்பட்டது. எனவே கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்தப்பட்டு, சம்பவ இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வளர்ப்பு விலங்குகள் மற்றும் மனிதர்களையும் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
- மொத்தம் 429 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
ஊட்டி,
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்தவற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கினர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 404 நியாய விலைக் கடைகளில் 2,20,473 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1 நியாயவிலைக்கடைக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், இரண்டாம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
முதற்கட்ட முகாமானது வருகிற 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாமானது ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இப்பணியினை மேற்கொள்ள 631 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் மற்றும் 120 ரிசர்வ் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 404 முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 404 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உதவி மைய தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் முதற்கட்ட முகாமில் 339 நபர்களும், இரண்டாம் கட்ட முகாமில் 292 நபர்களும் இப்பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல், நமது மாவட்டத்திலுள்ள 404 நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையின் சார்பில் முகாம்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில், முதற்கட்ட முகாமில் 221 காவலர்களும், இரண்டாம் கட்ட முகாமில் 208 காவலர்களும் என மொத்தம் 429 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
குறிப்பிட்ட நாளில் வர இயலாத பொதுமக்கள் இறுதி இரண்டு நாட்களில் விண்ணப்பபடிவங்களை வழங்கலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க 404 முகாம் ெபாறுப்பு அலுவலர்கள் (கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் நிலையில்), 81 மண்டல அலுவலர்கள் (துணை வட்டாட்சியர, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், 5 முகாம்களுக்கு 1 நபர்), 27 கண்காணிப்பு அலுவலர்கள் (வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில், 15 முகாம்களுக்கு 1 நபர்), 6 வட்டங்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (துணை ஆட்சியர் நிலையில்), ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 19 மாவட்ட நிலை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
பழங்குடியின மக்களை அழைத்து செல்ல தேவைப்படும் இடங்களில் வாகன வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ் ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பருவமழைக்காலம் நடக்கிறது. இதனால் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயம் அதிகம் உள்ளது. எனவே அங்கு உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் மேலாண்மை மூலம் தற்காத்து கொள்வது எப்படி என்பது தொடர்பாக கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
அப்போது மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் சைனீஸ் காய்கறி ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ட்ரைக்கோ டெர்மா உள்ளிட்ட நுண்ணுயிர் கலவைகளை ஒரு ஏக்கருக்கு 2 புள்ளி வீதம் 5 கிலோவை, 200 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயல் முழுவதும் தெளித்து வந்தால், நோய் வரும் முன்பாகவே தற்காத்து கொள்ளலாம்.
அதேபோல நோய் எதிர்ப்பு திறன் மிகுந்த பயிர் வகைகளை பயிரிடுவது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பூஞ்சன கொல்லிகளை சரியான கால இடைவெளியில் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு பயிர்களில் மிகவும் சவாலாக உள்ள நூல் புழுக்களை பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் வரப்பு ஓரங்களில் கடுகு, செண்டுமல்லி ஆகிய பூச்சிகளை கவரும் பொறிபயிர்கள் பயிரிட்டு, அங்கு ஏக்கருக்கு 2 எண்கள் சோலார் விளக்கு பொறி, லிட்டருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறிகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை களை செய்தால், விவசாயிகள் செலவினங்களை குறைத்து பயனடைய முடியும் என்று அதிகாரிகள் நேரடி செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தி, மக்கள் அதிகாரம், முற்போக்கு மக்கள் மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் ரவி, செயற்குழு உறுப்பினர் ராஜா, நீலகிரி மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மகேஷ், ரத்ததான நண்பர்கள் குழு செல்வம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன், உயர்வுக்கு படி, உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்லூரி சேர்க்கை முகாம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
இந்த முகாமை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் அம்ரித் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் நான் முதல்வன் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான சிறப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
நடப்பாண்டுக்கான நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாம் ஏற்கெனவே குன்னூர், கூடலூரில் நடத்தப்பட்டது. இதன்ஒருபகுதியாக தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது.
மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்புடன் நின்று விடாமல் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இங்கு அறிவியல், கலை, மருத்துவம் சார்ந்த படிப்புக்கான வழிமுறைகள் சொல்லித்தரப்படுகின்றன.
இங்கு மாணவ, மாணவிகளுக்கு வங்கி கடனுதவி தரும் சிறப்பு வசதியும், வருவாய்த்துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் முகாமும் அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே பள்ளிப்படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி டி.ஆர்.ஓ துரைசாமி, ஊட்டி நகரசபை தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அதிகாரி செல்வக்குமார், ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன.
- குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்றது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. இதனை வனத்துறையினர் கண்காணித்து வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி, யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்றது.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் யானையை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை திடீரென திரும்பி வந்து, சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதனால் அச்சம் அடைந்த அவர்கள் அலறியடித்தபடி காருக்குள் ஏறி உயிர் தப்பினர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் சாலையில் ஓடும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
- கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி, பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் ஓடும் காட்சி, அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து உலா வரும் கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நேரும்முன்பாக, அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கமிட்டி அமைத்து செயல்படுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரவேணு,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார் கௌரவ தலைவர் பாபு, சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வேண்டி நாக்குபெட்டா நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்குவது, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கமிட்டி அமைத்து செயல்படுவது என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக துணைத் தலைவர் போஜன் வரவேற்றார். பொருளாளர் சிவசுப்பிரமணி நன்றி கூறினார்.
- போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தரமாக ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும்
- கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையிலும், பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி முன்னிலையிலும் நடந்தது.
கூட்டத்தில் அரவேணு பஜார் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தரமாக ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும், மார்க்கெட், பஸ்நிலையத்தில் திரியும் கால்நடைகளின் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,கோத்தகிரி சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல மாதங்களாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும், கோத்தகிரி மார்க்கெட் முதல் காமராஜர் சதுக்கம் வரை நடைபாதை அருகில் உள்ள தடுப்பு கம்பிகளை அகற்றி, அங்கு இரண்டு சக்கர வாகனம் நிறுத்த அனுமதிக்க வேண்டும்,நகரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தெரு விளக்குகளும் சரியாக பராமரிக்க வேண்டும், ராம்சந்து முதல் சக்திமலை செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், இணை செயலாளர் கண்மணி, கூடுதல் செயலாளர் பீட்டர், ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், திரைசா, லலிதா, யசோதா, ரோஸ்லின், பியூலா, விக்டோரியா, லெனின்மார்க்ஸ், சுரேஸ், விபின்குமார், ஜம்புலிங்கம், ஜார்ஜ்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைசெயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.
- கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன
- 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
அரவேணு,
கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. முன்னாள் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளர் நஞ்சன் , பொருளாளர் கமலசீரலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன நெருப்பு வளையத்தை வேகமாக சுற்றி சாதனை படைத்த ஒரசோலை பகுதியை சேர்ந்த 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, ரோட்டரி ஆளுநர் சுரேஷ் பாபு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், துணை ஆளுநர் முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்லசிவம், முன்னாள் தலைவர்கள் தேவராஜ், ரவிக்குமார், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களுக்கான ஹிரோடைய்யா திருவிழா நடந்தது.
- இக்கோவில்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைதிறக்கப்படுவது வழக்கம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்களுக்கான ஹிரோடைய்யா திருவிழா நடந்தது. இதில் தொதநாடு சீமையை தலைமையிடமாக கொண்ட கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி மற்றும் டி.மணியட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் பாரம்பரிய உடை அணிந்தபடி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக அவர்கள் சங்கொலி எழுப்பியபடி அந்தந்த பகுதிகளில் உள்ள காட்டுக்கோவில்களுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அந்த கோவில்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைதிறக்கப்படுவது வழக்கம்.
ஹிரோடைய்யா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பிரம்புகளை உரசி அதில் இருந்து வெளியேறிய தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்ட னர். அப்போது கன்றுக் குட்டி ஈன்ற பசு மாட்டின் பால், கொம்புத்தேன் மற்றும் தும்பை ஆகியவை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு ஆண் பக்தர்கள் மட்டும் காணிக்கை செலுத்தி அய்யனை வழிபட்டனர். அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்கள் வன கோவிலில் இருந்து மீண்டும் சங்கொலி எழுப்பியபடி, அந்தந்த கிராமங்களுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த கோவில்களில் பெண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.






