search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் 404 முகாம்களில் ெபற ஏற்பாடு
    X

    ஊட்டியில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் 404 முகாம்களில் ெபற ஏற்பாடு

    • பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
    • மொத்தம் 429 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    ஊட்டி,

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்தவற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கினர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 404 நியாய விலைக் கடைகளில் 2,20,473 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1 நியாயவிலைக்கடைக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், இரண்டாம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    முதற்கட்ட முகாமானது வருகிற 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாமானது ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இப்பணியினை மேற்கொள்ள 631 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் மற்றும் 120 ரிசர்வ் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், 404 முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 404 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உதவி மைய தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் முதற்கட்ட முகாமில் 339 நபர்களும், இரண்டாம் கட்ட முகாமில் 292 நபர்களும் இப்பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல், நமது மாவட்டத்திலுள்ள 404 நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், காவல்துறையின் சார்பில் முகாம்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில், முதற்கட்ட முகாமில் 221 காவலர்களும், இரண்டாம் கட்ட முகாமில் 208 காவலர்களும் என மொத்தம் 429 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    குறிப்பிட்ட நாளில் வர இயலாத பொதுமக்கள் இறுதி இரண்டு நாட்களில் விண்ணப்பபடிவங்களை வழங்கலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க 404 முகாம் ெபாறுப்பு அலுவலர்கள் (கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் நிலையில்), 81 மண்டல அலுவலர்கள் (துணை வட்டாட்சியர, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், 5 முகாம்களுக்கு 1 நபர்), 27 கண்காணிப்பு அலுவலர்கள் (வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில், 15 முகாம்களுக்கு 1 நபர்), 6 வட்டங்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (துணை ஆட்சியர் நிலையில்), ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 19 மாவட்ட நிலை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    பழங்குடியின மக்களை அழைத்து செல்ல தேவைப்படும் இடங்களில் வாகன வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×