என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரவேணு பஜாரில் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக தீர்க்க வேண்டும்
- போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தரமாக ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும்
- கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையிலும், பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி முன்னிலையிலும் நடந்தது.
கூட்டத்தில் அரவேணு பஜார் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தரமாக ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும், மார்க்கெட், பஸ்நிலையத்தில் திரியும் கால்நடைகளின் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,கோத்தகிரி சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல மாதங்களாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும், கோத்தகிரி மார்க்கெட் முதல் காமராஜர் சதுக்கம் வரை நடைபாதை அருகில் உள்ள தடுப்பு கம்பிகளை அகற்றி, அங்கு இரண்டு சக்கர வாகனம் நிறுத்த அனுமதிக்க வேண்டும்,நகரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தெரு விளக்குகளும் சரியாக பராமரிக்க வேண்டும், ராம்சந்து முதல் சக்திமலை செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், இணை செயலாளர் கண்மணி, கூடுதல் செயலாளர் பீட்டர், ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், திரைசா, லலிதா, யசோதா, ரோஸ்லின், பியூலா, விக்டோரியா, லெனின்மார்க்ஸ், சுரேஸ், விபின்குமார், ஜம்புலிங்கம், ஜார்ஜ்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைசெயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.






