என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம்-நீலகிரியில் போராட்டம் நடத்த முடிவு
    X

    பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம்-நீலகிரியில் போராட்டம் நடத்த முடிவு

    • கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கமிட்டி அமைத்து செயல்படுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார் கௌரவ தலைவர் பாபு, சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வேண்டி நாக்குபெட்டா நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்குவது, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கமிட்டி அமைத்து செயல்படுவது என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக துணைத் தலைவர் போஜன் வரவேற்றார். பொருளாளர் சிவசுப்பிரமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×