என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கன்று குட்டியை கொன்ற சிறுத்தை
- சுமார் 2 வயது மதிக்கத்தக்க கன்றுகுட்டி, சிறுத்தை தாக்கி இறந்தது உறுதிசெய்யப்பட்டது.
- கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கெங்கரையை சேர்ந்த விமலா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி இட்டக்கல் பகுதியில் சிறுத்தை தாக்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்த வனத்துறை அதிகாரி ராம்பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது சுமார் 2 வயது மதிக்கத்தக்க கன்றுகுட்டி, சிறுத்தை தாக்கி இறந்தது உறுதிசெய்யப்பட்டது. எனவே கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்தப்பட்டு, சம்பவ இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வளர்ப்பு விலங்குகள் மற்றும் மனிதர்களையும் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






