என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் பைக் திருடிய வழக்கு-ஜாமீனில் வந்து தப்பியவர் ஆந்திராவில் சிக்கினார்
- ராஜசேகா் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
- ராஜசேகா் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஊட்டி,
ஊட்டி ஸ்டேன்ஸ் சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக, திண்டுக்கல் மாவட்டம், சீதப்பாடியைச் சோ்ந்த ராஜசேகா் (வயது 31) என்பவரை போலீசார் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் திடீரென் தலைமறைவானார். எனவே அவரை கைது செய்ய ஊட்டி குற்றவியல் நீதி மன்றம் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் உத்தரவின்படி தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ராஜசேகர் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம், ராஜமுந்திரிக்கு சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த ராஜசேகரை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தனா்.
அதன்பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ராஜசேகர் மீது ஊட்டி மட்டுமின்றி திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்டத்திலும் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்து உள்ளனர்.






