என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி நகராட்சி பள்ளியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை
    X

    ஊட்டி நகராட்சி பள்ளியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

    • குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.
    • கழிவுநீர் பொங்கி நிரம்பி பள்ளிக்குள் வழிந்தோடுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இதன் அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், ஊட்டி நகர்ப்புற வாழ்வாதார மையம் ஆகியவை உள்ளன.இந்த பகுதியில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இதில் குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அகற்றப்படாமல் உள்ளது.எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள், பாதாள சாக்கடையில் நிரம்பி அடைப்பை ஏற்படுத்தி உள்ளன.இதனால் அங்கு கழிவுநீர் பொங்கி நிரம்பி பள்ளிக்குள் வழிந்தோடுகிறது. எனவே அங்கு துர்நாற்றம் வீசுகின்றது.இதற்கிடையே குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள விளையாட்டு மைதானம் சரிவர பராமரிக்கப்படாததால், அங்கு புல் மற்றும் செடிகள் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் அப்பர்பஜாரில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளியில் அனைத்து குறைபாடுகளையும் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×