என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
    • ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    மஞ்சூர்

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானியில் தற்போது 180 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அைண நிரம்பியுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சாண்டி நல்லா அணை தனது முழு கொள்ளளவான 49 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நீர் வரத்து பெருமளவு அதிகரித்தது.

    அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பல இடங்களில் மண்சரிவும், சாலைகளில் மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
    • கூடலூா் பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தால் அப்பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பதை தவிா்க்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள கார–ணத்தால் அனைத்து தாலு–காக்களிலும் காற்றுடன் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.

    கூடலூா், தேவாலா பகுதிகளில் பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல இடங்களில் மண்சரிவும், சாலைகளில் மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 11 இடங்களில் மரங்கள் விழுந்தும், 4 இடங்களில் சிறு,சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

    இதில் 3 இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த பேரிடா் காலத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை ஆகியோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    கூடலூா் பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தால் அப்பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இரவு நேரப் பயணங்களைத் தவிா்க்க வேண்டும்.

    பகல் நேரங்களில் அதிக காற்றுடன் மழை இருப்பதால் வீடுகளை விட்டு அனாவசியமாக வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மரங்களின் அடியிலோ மற்றும் தடுப்பு சுவா்களின் அருகிலோ பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தாமல் இருக்க வேண்டும்.

    தங்களது பகுதிகளில் ஏதேனும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது மண்சரிவு ஏற்பட்டாலோ 0423-2223828, 97808-00100 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பரிசல் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக தெங்குமரஹடா, கல்லாம்பாளையம் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கிராம மக்களும் பரிசலில் சென்று வருகின்றனர். இன்று காலை கல்லாம்பாளையம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் கல்லாம்பாளையத்தை சேர்ந்த 3 பேர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கோத்தகிரி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பரிசலில் ஏறி மாயாற்றில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கில் பரிசல் சிக்கி கொண்டது. சிக்கிய வேகத்தில் சிறிது தூரம் பரிசல் அடித்து செல்லப்பட்டது.

    இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பரிசலில் இயக்கி கரைக்கு கொண்டு வந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பரிசல் ஓட்டுனர் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர்.

    • தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.
    • காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா்.

    நீலகிரி மாவட்டம் கூடலூா், மங்குழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்குள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அந்த பகுதி மக்களுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்து, மாற்றுப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்தக் குழுவினா் பாதிப்பு தகவல் கிடைத்தவுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணியை மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ளனா். கூடலூா் பகுதியில் கன மழை தொடர்வதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கு எடுத்துரைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முகாமில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் நகராட்சி ஆணையா் (பொ) காந்திராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, தி.மு.க. நகர செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

    • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது.
    • மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது. குறிப்பாக கூடலூர், அப்பர் கூடலூர், தேவாலா, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி நகரில் பெய்து வரும் கனமழையால் நகரின் மையப்பகுதியான கோவை செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. அந்த சமயம் அவ்வழியாக வாகன ஓட்டிகள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஊட்டி மத்திய பஸ் நிலைய சாலை, படகு இல்ல சாலை, தீட்டுக்கல் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டன.

    மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மெரிட்ட ராணி என்பவரின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்ததால் 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அருகே உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    எடக்காட்டில் இருந்து அவலாஞ்சி நோக்கி மின்வாரியத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் சென்றது. மழையால் அவலாஞ்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது. தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி மண்குவியலை அகற்றி ஆம்புலன்சை எடுத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் பொன்னானி, மங்குழி, காலம்புழா உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலங்களும் நீரில் மூழ்கின. இதனால் பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    கூடலூா் முதல் மைல் ஆற்றில் மூங்கில் புதா்கள் சாய்ந்துள்ளதால் ஆற்றுவெள்ளம் தடைபட்டு தண்ணீா் குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில் புதா்களை அகற்றும் பணி நடைபெறவில்லை.

    மஞ்சூர்-தங்காடு சாலையில் பிகுளிபாலம் அருகே ராட்சத மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர் தங்காடு ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற நெடுஞ்சாலைதுறையினர் மரத்தை வெட்டி அகற்றி சீரமைத்தனர். இதை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

    மஞ்சூர் எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் தடுப்பு சுவர் இடிந்து சாலையை மூடியது. இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.பெங்கால்மட்டம் கோத்திபென் அருகே மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மணி சரிவுகளை அகற்றினார்கள்.

    பெங்கால்மட்டம் கோத்திபென் அருகே மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மணி சரிவுகளை அகற்றினார்கள்.

    மழைக்கு நேற்று ஒரே நாளில் 7-க்கும் மேற்பட்ட வீடுகளும் மரம் விழுந்தும், இடிந்து விழுந்தும் சேதம் அடைந்தது.

    பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் ஏராளமான கிராமங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளாக காட்சியளித்தன. மின்சாரம் இல்லாததால் மக்களும் சிரமம் அடைந்தனர்.

    மஞ்சூரில் சூறாவளி காற்றில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைகளும் நிரம்பியுள்ளன.

    தொடா் மழையின் காரணமாக தொடா்ந்து 3-வது நாளாக ஊட்டி, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் சேர்ந்து காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது.
    • நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக அவலாஞ்சி, கூடலூர், அப்பர் கூடலூர், அப்பர் பவானி உள்ளிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    மழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மீட்பு பணிகளுக்கு 04232223828, 9789800100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது.
    • கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே மூப்பர்காடு பகுதியில் ஓலேண்டு தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்து கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது. பழங்குடியின கிராமமான மானார் முதல் மூப்பர் காலனி வரை செல்லும் தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் எத்தனை வனவிலங்குகள் இறந்து உள்ளன என்று வனத்துறையினரால் கணக்கிட முடியவில்லை.

    இந்தநிலையில் நேற்று வனத்துறை கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் செல்வகுமார், வனவர் திருமூர்த்தி, வனகாப்பாளகள் லோகேஷ், விக்ரம், வீரமணி மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கரடி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. கரடியின் காலில் மின்கம்பி சுற்றிய நிலையில் இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடியின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை சேகரித்துக் கொண்டனர்.

    கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்தில், விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் மதிப்புக் கூட்டல் தரம் பிரித்தல் குறித்து விளக்கப்பட்டது.
    • உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அரவேணு:

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் மசக்கல் கிராமத்தில் தோட்டக்கலை பயிர்களில் தரம் பிரித்தல், வகைப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி மேலாண்மை அலுவலர் வெற்றிவேல், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், தொழில்நுட்ப மேலாளர் பிரவீனா, மணிமேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் மதிப்புக் கூட்டல் தரம் பிரித்தல் மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும், உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.
    • சாலையின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அதன்மீது மோதாமல் இருக்க திருப்பும் போது சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது.

    அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

    மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி திரிகிறது. இதேபோல் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் புகுவதால், பள்ளி மாணவர்கள் பயந்து ஓடுகின்றனர்.

    மேலும் சாலைகளில் சுற்றி திரிவதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். திடீரென சாலையின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அதன்மீது மோதாமல் இருக்க திருப்பும் போது சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது. நடந்து செல்லும் மக்களையும் துரத்தி செல்கின்றன.

    எனவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட துறையினர் பிடித்து உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேலும் சாலைகளில் மாடுகளை சுற்ற விடுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
    • மேல்கூடலூரில் 22 செ.மீ, அவலாஞ்சி-19 செ.மீ, மேல்பவானி-18 செ.மீ, தேவாலா-16 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே அங்கு பலத்த மழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    நேற்று அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 18 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இன்றும் அங்கு மழை நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதே கூடலூர் பஜாரில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மேல்கூடலூரில் 22 செ.மீ, அவலாஞ்சி-19 செ.மீ, மேல்பவானி-18 செ.மீ, தேவாலா-16 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

    • கனமழையால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • முதுமலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    தொடர்மழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கொட்டி வரும் கனமழையால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காலை தொடங்கி இரவு முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக மாறியது.

    மழை காரணமாக பொன்னானி, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மழைக்கு கூடலூா்-மைசூரு சாலை, கூடலூா்-பெங்களூரு சாலை, கூடலூா்-நாடுகாணி சாலை, ஊட்டி-பந்தலூா் சாலை, ஊட்டி-எமரால்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நடுவட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. மண்குவியல், குவியலாக ரோட்டில் கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேரளா, கர்நாடகா போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரு புறங்களிலும் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

    கனமழையால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முதுமலை அருகே மசினகுடியில் இருந்து தெப்பக்காடு பகுதியை இணைக்கும் பாலம் செல்கிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் வரத்து அதிகரித்து தரைப்பாலம் முழுவதும் மூழ்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாலத்தை தாண்டி உள்ள மக்களை அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் அக்கரைக்கு சென்று வருகின்றனர்.

    மேலும் முதுமலை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடுப்பு சுவா் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா்கள் முற்றிலும் சேதமடைந்தன.

    இதில் ஒரு காரில் இருந்த விசுவநாதன் என்பவா் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதேபோல் அப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு நபரும் காயமடைந்தாா். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

    தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாக்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    • தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்து.

    இந்த நிலையில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    ×