என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூடலூர் பஜாரில் 23 செ.மீ. மழை பதிவு
- நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
- மேல்கூடலூரில் 22 செ.மீ, அவலாஞ்சி-19 செ.மீ, மேல்பவானி-18 செ.மீ, தேவாலா-16 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே அங்கு பலத்த மழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
நேற்று அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 18 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இன்றும் அங்கு மழை நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதே கூடலூர் பஜாரில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
மேல்கூடலூரில் 22 செ.மீ, அவலாஞ்சி-19 செ.மீ, மேல்பவானி-18 செ.மீ, தேவாலா-16 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
Next Story






