என் மலர்
நீலகிரி
- மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
- பள்ளி மாணவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஆடாசோலையில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6.49 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி களை விரைவாகவும் தரமா கவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அடுத்தபடி யாக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு போடப்பட்டு வரும் பைப்புகளின் எடை, அகலம் உள்ளிட்ட அம்சங்க ளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.
ஊட்டி அணிக்கொரை பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போக்கு வரத்து சாலைப்பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆடாசோலை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்க டைக்கு சென்ற கலெக்டர் அங்கு நடப்பு மாதத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கிய விவரம், மீதம் உள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில் ஆகிய பொருட்களின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடைஅளவு ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து ஆடாசோலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் எடை, உயரம், உணவின் தரம் மருந்து பொருட்களின் இருப்பு ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது.
தூனேரி ஊராட் சிக்கு உட்பட்ட அணிக் கொரை தொடக்கப்பள்ளி யில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய சேமிப்பு அறை மற்றும் சமையலறை ஆகிய வைற்றை பார்வையிட்ட கலெக்டர் அம்ரித், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாண வர்களிடம் கைகழுவும் முறை குறித்து அறிவுரை வழங்கியவர், நன்றாக படிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் அபாயகரமாக உள்ள மரங்களின் கிளை களை வெட்டி அகற்றும்படி அதிகாரிகளிடம் தெரி வித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அம்ரித் ஆய்வு நடத்தியபோது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வ குமரன், வட்ட வழங்கல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி நந்தகுமார், தூனேரி ஊராட்சி அணிக் கொரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சீதா மற்றும் பலர் உடன் இருந்த னர்.
- போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோத்தகிரி,
தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்தில் நடக்கும் விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
அப்போது இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின்சீட்டில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். கார் டிரைவர்கள் அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும்,, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, போக்கு வரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபரா தம் ஆகியவை குறித்து பொது மக்களிடம் விழிப்பு ணர்வு செய்யப் பட்டது. அதன்பிறகு போலீ சார் காமராஜர் சதுக்கம்,பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடமும் விழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பதி, சிறப்பு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சிவக்குமார்,பாலசுப்ரமணியம்,காவல் உதவி ஆய்வாளர் பிலிப்ஸ் சார்லஸ் , மற்றும் போக்குவரத்து காவலர்கள்,நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- தோடர் பழங்குடியினத்தில் இருந்து வரப்போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை.
- நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
ஊட்டி:
நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வு கடந்த மே 7-ந் தேதி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. இதில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி நீத்துசின் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஊட்டி கார்டன் மந்தை சேர்ந்தவர் நார்ஷ்தோர் குட்டன். இவரது மனைவி நித்யா. இந்த தம்பதியரின் மகளான நீத்துசின் நீட் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் இன மாணவி ஆவார்.
மேலும் மருத்துவம் படிக்க போகும் முதல் மாணவி என்ற பெருமைக்குரியவர் என தோடரின மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நீத்துசின் கூறும்போது, எங்கள் தோடர் இனத்தில் இருந்து மருத்துவம் படிக்கும் முதல் மாணவியான நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் மருத்துவம் பயின்று, வசதியற்ற மக்களுக்கும், எனது சமுதாயத்துக்கும் சேவை புரிவதே எனது நோக்கம் என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் பிரியா நாஷ்மிகர் கூறியதாவது:-
தோடர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நீத்து சின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
இவர் தோடர் பழங்குடியினத்தில் இருந்து வரப்போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இவருக்கு கைகொடுத்தது. இவரின் சாதனை தோடர் பழங்குடியினருக்கு பெருமை சேர்ப்பதாகும்.
இவரது வெற்றிக்குப்பிறகு பழங்குடியின குழந்தைகள் அனைவரும் உத்வேகத்துடன், தடைகளை தகர்த்து பெரிய உயரங்களை எட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எஸ்.டி. பிரிவு மாணவர்கள் தேர்ச்சி பெற 109 மதிப்பெண்கள் போதுமானது.
- கோத்தகிரியில் இருந்து ஒரு மினி லாரி மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது.
- கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை அடிக்கடி தென்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இது அங்கு உள்ள கடைகளை முற்றுகையிடுவதும், சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதுமாக தொடா்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து ஒரு மினி லாரி மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. அப்போது முள்ளூா் பகுதியில் ஒற்றை காட்டு யானை திடீரென நடுரோட்டில் வழிமறித்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், வண்டியை நிறுத்திவிட்டு, அலறியபடி ஓட்டம் பிடித்தாா். அதன்பிறகு அந்த லாரியில் உணவு தேடிய யானை, எதுவும் கிடைக்காததால் சிறிது நேரத்துக்குப் பின் அங்கிருந்து காட்டுக்குள் சென்று மறைந்தது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை அடிக்கடி தென்படுகிறது. இது அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோத்தகிரி- மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதை அடா்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- குன்னூர் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
- பருவமழையை சமாளிக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குன்னூர்,
தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் வந்திருந்தார். அப்போது கனமழை கொட்டியது. இருந்தபோதிலும் அவர் மழையில் நனைந்தபடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது குன்னூர் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அடுத்து பந்துமிரேலியா அணைக்கட்டு பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் நீலகிரி கலெக்டர் அம்ரித் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. எனவே பருவமழையை சமாளிக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஜே.சி.பி. வாகனங்கள், மரங்களை வெட்டி அகற்றும் எந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தீயணைப்பு, வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கனமழையால் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் பொதுமக்களை தங்கவைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் உள்ள வண்டிச்சோலை பகுதியில், மதுபாட்டில்கள் ஏற்றி வந்த ஒரு டாஸ்மாக் லாரி, சாலை யோரம் நின்றது. அப் போது அங்கு இருந்த ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந் தது. இருந்தபோ திலும் டிரைவர், கண்டக்டர் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர். கோத்தகிரி- குன்னூர் போக்குவரத்து சாலையில் மரம் விழுந்த தால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகு றித்து தகவல் அறிந்த தீய ணை ப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வேகமாக மரத்தை அப்பு றப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சாலை யை சீர் செய்தனர்.
லாரியின் மேல் மரம் விழுந்த சம்பவம் அப்ப குதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- "குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்"
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த பேரணியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்" என்ற பிரச்சார முழக்கத்துடன், விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக ரத்தம் தேவை. எனவே ரத்ததானம் செய்வது மிகவும் அவசியம். எனவே நீங்கள் அனைவரும் ரத்ததானம் கொடுப்பது மட்டுமின்றி ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.
- பாஸ்கரனுக்கு கை, கால் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம், பிதர்காடு வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது அம்பலமூல அயனிப்புர கிராமம். இந்த கிராமம் வனத்தையொட்டி உள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகும் யானைகள், அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). கூலித் தொழிலாளி. இவர், நேற்று இரவு, வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.
யானை நிற்பதை பார்த்த அவர் அங்கிருந்து நகர முயன்றார். ஆனால் யானை அவரை விரட்டி வந்து, துதிக்கையால் தூக்கி எறிந்தது. இதில் பாஸ்கரனுக்கு கை, கால் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் யானையை அங்கிருந்து விரட்டி விட்டு, காயத்துடன் உயிருக்கு போராடிய பாஸ்கரனை தூக்கி கொண்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே யே பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பலமூலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே யானை தாக்கி கூலித்தொழிலாளி இறந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அயனிப்புரா கிராமத்தில் யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்திற்குள் யானை வருகிறதா? யானை எங்கு நிற்கிறது என்பதை பார்த்து கண்காணித்து வருகின்றனர்.
யானை தாக்கி கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது.
- புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது 321 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் மாயாறு- சத்தியமங்கலத்தை இணைக்கும் யானை வழித்தடமும் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி சிங்காரா வனப்பகுதி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இதனை பார்த்ததும் அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனவே அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அந்த புலி வாகன போக்குவரத்து பற்றி சிறிதும் கவலைப்படாமல், கம்பீரமாக நடந்து வந்தது. போக்குவரத்து சாலையை மெதுவாக கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. சிங்காரா போக்குவரத்து சாலையில் புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருந்தபோதிலும் ஒருசிலர் புலியின் ராஜ நடையை, வீடியோ எடுத்து பொதுவெளியில் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பூக்கும் தாவரமாகும்.
- இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியில் டேலியா என்ற வகையிலான பூ பூத்துக் குலுங்கிறது. இந்த டேலியா பூ சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ரோஸ் என பல்வேறு கலர்களில் கண்ணை கவரும் வகையில் உள்ளது.
இந்த பூவானது ஒரு கோடைகால பூவாகும். இதுடேலியா இம்பீரியலிஸ் அல்லது பெல்ட்ரீடேலியா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பூ 8-10 மீட்டர் உயரம் வரை வளரும் ஆஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பூக்கும் தாவரமாகும்.
இந்த பூ மெக்சிகோ, பெலிஸ், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் , நிகரகுவா , கோஸ்டாரிகா, பனாமா மற்றும் தெற்கே கொலம்பி யா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் அதிகளவில் பூக்ககூடியது.
இந்த பூவின் இதழ்கள்களை கொண்டு பச்சை சாலடுகள், சூப்புகளும் தயாரிக்கப்படுகிறது. இதனை மக்கள் விரும்பி வாங்கி அருந்தி வருகின்றனர். தற்போது இந்த பூக்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிக ளவில் பூத்து குலுங்குகிறது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது.
- காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்படுகிறது
- இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அரவேணு,
பொதுமக்களிடையே காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக சிறு சோலை காடுகள் அமைக்கும் திட்டத்தை கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் செயல்படுத்த இயற்கை ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இதற்கென டெல்லியை சேர்ந்த விஞ்ஞானி சாந்தகுமார், மைசூரைச் சேர்ந்த விஞ்ஞானி சிரிஷா, ஓய்வு பெற்ற வனவர் பாலகிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு கல்வி மற்றும் விழிப்புணர்வு உபயோகத்திற்காக ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள அந்நிய தாவரங்கள் மற்றும் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக சோலை மரங்கள், புற்கள், மூங்கில் உள்ளிட்டவற்றை நடவு செய்து சிறு சோலை மரக் காடு அமைக்க உள்ளனர். மேலும் இந்த சோலையை அக்குழுவினர் 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் உள்ளனர். இதன் தொடக்க விழா மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடந்தது. இதில் இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டு சோலை மரநாற்றுக்களை நடவு செய்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இந்த குழுவினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி களுக்கு காடுகள் வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றனர்.
- கலெக்டர் அம்ரித் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவா்கள், பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.
- சாதிச்சான்று வழங்குவதற்கு தீா்வு கிடைத்தால் மட்டும் மாணவா்கள் பள்ளிக்கு செல்வாா்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட ஏகுணி அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவா்கள் சாதிச்சான்று வழங்கக்கோரி கடந்த 12-ந் தேதி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களுக்கு ஆதரவாக பெற்றோா்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
இதையடுத்து வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், அதிகாரிகள் பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவு வரை போராட்டம் நீடித்தது. இந்நிலையில், சாதிச் சான்று வழங்கக்கோரி 2-வது நாளாக நேற்றும் வகுப்பு களைப் புறக்கணித்து மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடு பட்டனா்.
இதையடுத்து, கலெக்டர் அம்ரித், பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளுடன் முகாம் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்த பிரச்சினை குறித்து முதல்வரின் செயலா், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு செயலா் ஆகியோா் தன்னுடன் பேசி வருவதாகவும், அவா்கள் கொடுத்த வழிகாட்டுதல் படி உரிய ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவா்கள், பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வா்கள் கூறியதாவது:-
நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசாவுடன் இணைந்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித் துள்ளாா். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்துள்ளோம். ஆனால், அதுவரை மாணவா்களும் பள்ளிக்கு செல்லமாட்டாா்கள்.
சாதிச்சான்று வழங்கு வதற்கு தீா்வு கிடைத்தால் மட்டும் மாணவா்கள் பள்ளிக்கு செல்வாா்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.






