என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழங்குடியின மாணவர்கள் சாதிச்சான்று கேட்டு 2 நாள் போராட்டம்
- கலெக்டர் அம்ரித் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவா்கள், பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.
- சாதிச்சான்று வழங்குவதற்கு தீா்வு கிடைத்தால் மட்டும் மாணவா்கள் பள்ளிக்கு செல்வாா்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட ஏகுணி அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவா்கள் சாதிச்சான்று வழங்கக்கோரி கடந்த 12-ந் தேதி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களுக்கு ஆதரவாக பெற்றோா்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
இதையடுத்து வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், அதிகாரிகள் பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவு வரை போராட்டம் நீடித்தது. இந்நிலையில், சாதிச் சான்று வழங்கக்கோரி 2-வது நாளாக நேற்றும் வகுப்பு களைப் புறக்கணித்து மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடு பட்டனா்.
இதையடுத்து, கலெக்டர் அம்ரித், பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளுடன் முகாம் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்த பிரச்சினை குறித்து முதல்வரின் செயலா், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு செயலா் ஆகியோா் தன்னுடன் பேசி வருவதாகவும், அவா்கள் கொடுத்த வழிகாட்டுதல் படி உரிய ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவா்கள், பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வா்கள் கூறியதாவது:-
நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசாவுடன் இணைந்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித் துள்ளாா். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்துள்ளோம். ஆனால், அதுவரை மாணவா்களும் பள்ளிக்கு செல்லமாட்டாா்கள்.
சாதிச்சான்று வழங்கு வதற்கு தீா்வு கிடைத்தால் மட்டும் மாணவா்கள் பள்ளிக்கு செல்வாா்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.






