என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேலியா பூ"

    • ஆஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பூக்கும் தாவரமாகும்.
    • இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியில் டேலியா என்ற வகையிலான பூ பூத்துக் குலுங்கிறது. இந்த டேலியா பூ சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ரோஸ் என பல்வேறு கலர்களில் கண்ணை கவரும் வகையில் உள்ளது.

    இந்த பூவானது ஒரு கோடைகால பூவாகும். இதுடேலியா இம்பீரியலிஸ் அல்லது பெல்ட்ரீடேலியா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பூ 8-10 மீட்டர் உயரம் வரை வளரும் ஆஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பூக்கும் தாவரமாகும்.

    இந்த பூ மெக்சிகோ, பெலிஸ், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் , நிகரகுவா , கோஸ்டாரிகா, பனாமா மற்றும் தெற்கே கொலம்பி யா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் அதிகளவில் பூக்ககூடியது.

    இந்த பூவின் இதழ்கள்களை கொண்டு பச்சை சாலடுகள், சூப்புகளும் தயாரிக்கப்படுகிறது. இதனை மக்கள் விரும்பி வாங்கி அருந்தி வருகின்றனர். தற்போது இந்த பூக்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிக ளவில் பூத்து குலுங்குகிறது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது.

    ×