search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதுமலை சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் ராஜநடை போட்டு சென்ற புலி
    X

    ரோட்டை கடந்து சென்ற புலியை படத்தில் காணலாம்.

    முதுமலை சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் ராஜநடை போட்டு சென்ற புலி

    • ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது.
    • புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது 321 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் மாயாறு- சத்தியமங்கலத்தை இணைக்கும் யானை வழித்தடமும் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி சிங்காரா வனப்பகுதி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இதனை பார்த்ததும் அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனவே அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    அந்த புலி வாகன போக்குவரத்து பற்றி சிறிதும் கவலைப்படாமல், கம்பீரமாக நடந்து வந்தது. போக்குவரத்து சாலையை மெதுவாக கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. சிங்காரா போக்குவரத்து சாலையில் புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருந்தபோதிலும் ஒருசிலர் புலியின் ராஜ நடையை, வீடியோ எடுத்து பொதுவெளியில் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×