என் மலர்
நீலகிரி
- தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன
- தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது.
குன்னூர்,
குன்னூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து தேவாலயம் வடிவமைப்பில் தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது. அந்தோனியார் கோவிலில் தொடங்கிய தேர்பவனி குன்னூர் மவுண்ட் ரோடு, ஒய்.எம்.சி கார்னர், மார்க்கெட், டாக்சி ஸ்டாண்ட், பஸ் நிலையம் வழியாக மீண்டும் மவுண்ட் ரோடு வந்து தேவாலயம் சென்றடைந்தது. குன்னூர் அந்தோணியார் தேர்பவனியில் இந்துக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது. இதில் தலைவர் வாசுதேவன், துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் மரியம்மா, இணை செயலாளர் கண்மணி, விக்டோரியா, கிரேசி, லலிதா, சங்கீதா, ரோஸ்லின், ஜம்புலிங்கம், சுரேஸ், பிரேம் சதீஷ், மசினகுடி கரியன், தேவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் உள்ள நீரோடைகளை தூர்வாரி, நீராதாரத்தை பெருக்க வேண்டும், கோத்தகிரி பண்டகசாலை முன்புறம் உள்ள பாலத்தை அகலப்படுத்தி, வேகத்தடைக்கு இரவில் ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும், நகரப்பகுதிகளில் விற்பனையாகும் இட்லி மாவு பாக்கெட், உப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், கோத்தகிரி தினசரி சந்தையின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய வேண்டும், அளக்கரை குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இறைச்சி, மீன் விற்பனை கடைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் பால் பாக்கெட் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா்.
ஊட்டி,
கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. சட்டப்பேரவை கொறடா வும், முன்னாள் அமைச்ச ருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா். எனவே வருகிற பாராளுமன்ற தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் தி.மு.க. அரசு மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் தரவில்லை. ஆனால் 2 ஆண்டு சாதனைகள் என்ற பெயரில் தற்போது பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படாத நிலையில் உள்ளது. இதை பொதுமக்கள் நன்கு உணா்ந்து உள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன், மாநில வா்த்தக அணித் தலைவா் சஜீவன், முன்னாள் குன்னூா் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, முன்னாள் மாவட்டச் செயலாளா் அா்ச்சுனன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- .சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
- ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டனர்
ஊட்டி, ஜூன்.19-
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஊட்டி 200 நிறைவு விழா மற்றும் முதல்-அமைச்சர் கோப்பை க்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளி ப்பு விழா சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் 61 அரசு துறை அலுவலர்களுக்கும், ஊட்டி 200 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்த ஒருங்கிணைப்பா ளர்கள் 27 பேருக்கும், 2 நன்கொடையாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை யும், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியான கால்பந்து, கிரிக்கெட், கையுந்து பந்து, வளைகோல் பந்து, கபடி, மாற்றுத்தி றனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
விழாவில் அவர்கள் ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளி யிட்டார்கள். முன்னதாக ஜானசல்லீன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.
- பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்தநிலையில் கோத்தகிரி அடுத்த கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.
இதனை பார்த்த தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் சத்தம் போடவே, அந்த கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக காட்டுக்குள் சென்று விட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.
அதிலும் ஒருசில கரடிகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. ஒருசில நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து நாசப்படுத்துகிறது. வீடுகளை சுற்றி வந்து உணவு தேடி நோட்டம் பார்த்து நிற்கிறது.
இதனால் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டி உள்ளது. எனவே கேசலாடா குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
- தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி.ராசா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
- மாணவி நீத்து சென்னுக்கு 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கான செலவை திமுக ஏற்றுக் கொள்ளும்.
ஊட்டி,
ஊட்டி 200-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி.ராசா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அப்போது நீலகிரியில் வாழும் கோத்தா், இருளா், குறும்பா், காட்டு நாயக்கா், பணியா், தோடா் ஆகிய பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூா் மக்கள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.
இதனை தொடர்ந்து ஆ.ராசா கூட்டத்தில் பேசும்போது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சமத்துவபுரம், மாற்றுத்திறாளிகள், திருநங்கைகளுக்கான திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கியவா் கருணாநிநி.
இது நாட்டில் எந்த முதல் அமைச்சரும், பிரதமரும் செய்யாத திட்டங்கள். அதனை கலைஞர் சாத்தியப்படுத்தி உள்ளார். இவரைப் போன்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் நாம் அனைவரும் பெருமை அடைய வேண்டும் என்றாா்.
முன்னதாக நீட் தோ்வில் வெற்றி பெற்ற தோடா் பழங்குடியின மாணவி நீத்து சென்னுக்கு அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோா் சால்வை அணிவித்து கவுரவித்தனா். அப்போது இந்த மாணவி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றால், 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கான செலவை திமுக ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.
- பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- அங்கு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளும் வழங்கினர்.
ஊட்டி,
தமிழக சட்டசபை பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈஸ்வரன், கிருஷ்ணசாமி, சரஸ்வதி, சேகர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
முதல்கட்டமாக நீலகிரி மாவட்டம், மசினக்குடி ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஷ்யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 78 வீடுகளை பார்வையிட்டனர். அதன்பிறகு சட்டசபை பொதுக்கணக்குக்குழு, பைக்காராவுக்கு சென்றது. அங்கு புனல் மின்உற்பத்தி நிலையத்தில், மின்சாரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்ற சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு, அங்கு ஆஸ்கர் விருதுபெற்ற குறும்படத்தில் நடித்த யானைப்பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினர். பின்னர் அங்கு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளும் வழங்கினர்.
அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண், சட்டசபை பொதுக்கணக்குக் குழு இணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், தமிழக மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, கூடலூர் நகரசபை தலைவர் பரிமளா, வருவாய் கோாட்டாட்சியளர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா (கூடலூர்), தமிழக மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலாஜி, உதவி இயக்குநர்கள் சாம் சாந்தகுமார் (ஊராட்சிகள்), இப்ராகிம்ஷா (பேரூராட்சி கள்), கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி), சித்தராஜ் (கூட லூர்), வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணா துரை, ஆறுமுகம், மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மோகன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
- மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி அங்கு உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனி மாத அமாவாசை நாளான நேற்று கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.
அப்போது 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர். மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கோத்தகிரி கடைவீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன், பண்ணாரி மாரியம்மன், டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களில் ஆனி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டன.
- மருத்துவமனை புதுப்பொலிவுக்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது.
கோத்தகிரி,
தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்களில், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு வெளிநோயாளிகள் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு வார்டு உள்பட பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளன.
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ரத்த வங்கி, பிணவறைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் இங்கு உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதுப்பொலிவுடன் அதிநவீன வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் எழுப்பும் பணி இரவு பகலாக மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. அங்கு தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு, இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட ஊராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற உள்ளாட்சி பிரதிநிதி கள் கூட்டம், ஊட்டி கூட்ட அரங்கில் நடந்தது.
மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப் பினர்கள் இளங்கோவன், ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார் வரவேற்றார். உள்ளாட்சி தி.மு.க பிரதிநிதிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், பிரேம்குமார், நெல்லை கண்ணன், பீமன், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை, ஷீலா கேத்ரின், ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், சதீஷ்குமார், நடராஜன், சுந்தரராஜ், முத்து, சின்னவர், ரமேஸ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி துணை தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி, நாகராஜ், பேரூராட்சி தலைவர்கள்-துணை தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சித்ராதேவி, ஹேமாமாலினி, சத்திய வாணி, வள்ளி, ராதா, பேபி, பங்கஜம், உமாநாத், ரமேஷ்குமார், செல்வம், விக்டர், நாகேஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும்.
பா.ஜ.க அரசு அமைந்தது முதல் நாட்டில், தங்களுக்கு எதிரான அரசியல் கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மத்திய விசாரணை ஏஜென்சிகளை கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. அவர்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மட்டு மின்றி தலைமை செயலகத்திலும் அத்துமீறி புகுந்து சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தி உள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் மனித நேயமற்ற முறையில் நடந்தது கண்டிக்கத்தக்கது. வெறுப்பு அரசியலை கையில் எடுத்து உள்ள பா.ஜ.க. அரசிற்கு எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இறுதியில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
- தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி உடன் இருந்தார்
கோவை,
நீலகிரி மாவட்ட அ.ம.மு.க அமைப்பு செயலாளர் தேனாடு லட்சுமணன் பொதுச் செயலாளர் எடபாடிபழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அவருடன் அ.ம.மு.க பொதுகுழு உறுப்பினர் பாபு, த.மா.கா இளைஞரணி மாவட்ட செயலாளர் விசுவநாதன், தொண்டர்அணி அமைப்பாளர் டேனியல்பிரபு ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் ஆகியோரும் உடன் இருந்தனர்
- ஊட்டி நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்கு உரியவா் ஜான்சல்லீவன்.
- பொதுமக்கள் பாதுகாப்புக்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
ஊட்டி,
ஊட்டி நகரை கட்டமைத்த ஜான் சல்லீவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்கு உரியவா் ஜான்சல்லீவன்.
அவரை நினைவு கூறும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில், ரூ. 20 லட்சம் மதிப்பில் 2 அடி உயரத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, இதனை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.
ஊட்டி 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் நிறைவு விழாவில் தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ராசா ஆகியாா் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க உள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புக்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படுவதாக, 283 பகுதிகள் கண்ட றியப்பட்டு உள்ளன.
அந்த இடங்களில் 42 மண்டல குழு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அடுத்தபடியாக மழையால் ஏற்படும் மண் சரிவு, சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றுவதற்காக, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் குழுவினா் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஊட்டி ஆர்.டி.ஓ துரைசாமி, தாசில் தார் ராஜசேகா், ஊட்டி நகரசபை தலைவா் வாணீஸ்வரி, துணைத்த லைவா் ரவிக்குமாா், நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகராட்சிப் பொறியாளா் சேரமாகனி உள்பட அதிகாரிகள் பலா் உடன் இருந்தனர்.






