என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசையுடன் நடந்த ஊட்டி 200 நிறைவு விழா
- தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி.ராசா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
- மாணவி நீத்து சென்னுக்கு 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கான செலவை திமுக ஏற்றுக் கொள்ளும்.
ஊட்டி,
ஊட்டி 200-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி.ராசா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அப்போது நீலகிரியில் வாழும் கோத்தா், இருளா், குறும்பா், காட்டு நாயக்கா், பணியா், தோடா் ஆகிய பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூா் மக்கள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.
இதனை தொடர்ந்து ஆ.ராசா கூட்டத்தில் பேசும்போது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சமத்துவபுரம், மாற்றுத்திறாளிகள், திருநங்கைகளுக்கான திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கியவா் கருணாநிநி.
இது நாட்டில் எந்த முதல் அமைச்சரும், பிரதமரும் செய்யாத திட்டங்கள். அதனை கலைஞர் சாத்தியப்படுத்தி உள்ளார். இவரைப் போன்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் நாம் அனைவரும் பெருமை அடைய வேண்டும் என்றாா்.
முன்னதாக நீட் தோ்வில் வெற்றி பெற்ற தோடா் பழங்குடியின மாணவி நீத்து சென்னுக்கு அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோா் சால்வை அணிவித்து கவுரவித்தனா். அப்போது இந்த மாணவி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றால், 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கான செலவை திமுக ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.






