என் மலர்
நாமக்கல்
- பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
- குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் ஜெயந்தி, செல்வாம்பிகை, மயக்கவியல் நிபுணர் செந்தில் ராஜா, செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து பெண்களுக்கும் ஊக்கப் பரிசாக புடவை வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, குடும்ப நலம் துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, மாவட்ட விரிவாக்க பணிகள் சனாஸ் ராஜன் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தினசரி ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். நல்லெண்ணெய், சீயக்காய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
வெண்ணை காப்பு
இந்த கோவிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் நடைபெறும்.
மொத்தம் 120 கிலோ வெண்ணை மூலம் சுவாமிக்கு அலங்காரம் செய்து வெண்ணை காப்பு உற்சவம் நடைபெறும். இவ்வாறு வழிபட்டால் சுவாமி உள்ளம் குளிர்ந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
முன்பதிவு
தற்போது கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வெண்ணைய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
என கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
- தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் - திருச்செங்கோடு வழித்தடத்தில் பஸ்கள் திடீர் என ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதும், பஸ் படியில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்து இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக தனியார் பஸ்சின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பஸ் கண்டக்டரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றி சென்றாலும், படியில் நின்று பயணம் செய்வதற்கு பயணிகளை அனும தித்தாலும் கண்டக்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன் பஸ்சின் பர்மிட் மீதும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
- கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
- நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார்.
- நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நாமக்கல் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 288 பேர் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோத னைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் டாக்டர் உமா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
- காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலைய காதி கிராப்ட் விற்பனை நிலையம் பூமாலை வணிக வளாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கதர் கிராம தொழில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மோகனூர் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மோகனூர் எழில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடி கொள்முதல் மையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சோப்பு உற்பத்தி அலகு கட்டடத்தை பார்வையிட்டு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பிற துறைகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலை, தேங்காய் கொப்பரை, எள் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பொது ஏலத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் விற்பனை நடைபெற்றது.
எடப்பாடி:
சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணாபுரம் அருகே உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலை, தேங்காய் கொப்பரை, எள் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் விற்பனை நடைபெற்றது.
இதில் முதல் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,210 முதல் ரூ.8,819 வரை விற்பனை யானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,725 முதல் ரூ.8,010 வரை விலை போனது. அடுத்து வரும் நாட்களில் இம்மையத்தில் நிலக்கட லைக்கான பொது ஏலம் நடைபெற உள்ளதாகவும், இதில் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நிலக்கடலைகளை எந்தவித கட்டணமும் இன்றி விற்பனை செய்து பயன்பெறுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 25.50 குவிண்டால் எடை கொண்ட 77 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.39-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.80.30-க்கும் சராசரி விலையாக ரூ.86.70-க்கும் என ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 541-க்கு ஏலம் போனது.
- சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
- கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள வாழவந்தி கிழக்கு வீதியை சேர்ந்தவர் மலையாளம். இவருடைய மகன் சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மனம் நொந்து பேசுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது வீட்டின் வெளியே இருந்த அவருடைய தம்பி பிரகாஷ், பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுகுமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 28-வது அஞ்சல்வழி/ பகுதிநேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் தொடங்கப்படவுள்ளது.
- இதற்கு www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-2024-ம் ஆண்டு 28-வது அஞ்சல்வழி/ பகுதிநேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கு www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் வருகிற 30-ந் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிள்ஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796- சேலம் பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ், முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில், நாமக்கல் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






