என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவை சிகிச்சை முகாம்"

    • பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் ஜெயந்தி, செல்வாம்பிகை, மயக்கவியல் நிபுணர் செந்தில் ராஜா, செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து பெண்களுக்கும் ஊக்கப் பரிசாக புடவை வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, குடும்ப நலம் துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, மாவட்ட விரிவாக்க பணிகள் சனாஸ் ராஜன் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானோர் பங்கேற்றனர்
    • 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது இதில் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி சங்கர் நோயாளிகளை பரிசோதனை செய்தார்.

    வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சிடி ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது . காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. சங்கர் தலைமை தாங்கி நோயாளிகளை பரிசோதனை செய்து முகாமைதொடங்கி வைத்தார். இந்த முகாமில் இலவசமாக அறுவை சிகிச்சை ஆலோசனை, மகளிருக்கான மருத்துவ ஆலோசனை, இருதய ஆலோசனை, சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கான ஆலோசனை, டயாலிசிஸ் சிகிச்சை, தோல் வியாதி ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், அதில் அல்லாதவர்கள் சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    .இந்த முகாமில் மூலம் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக பிரச்சனைகள், தோல் வியாதிகள் ஆகியவற்றுக்கு மகப்பேறு நிபுணர் டாக்டர் லதா லட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கரண்சங்கர், அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் சீனிவாசன், தோல் மருத்துவ சிகிச்சை டாக்டர் ரூபன் ஜேசுதாஸ், சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    ×