என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு புடவை வழங்கிய போது எடுத்த படம்.
பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
- பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
- குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் ஜெயந்தி, செல்வாம்பிகை, மயக்கவியல் நிபுணர் செந்தில் ராஜா, செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து பெண்களுக்கும் ஊக்கப் பரிசாக புடவை வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, குடும்ப நலம் துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, மாவட்ட விரிவாக்க பணிகள் சனாஸ் ராஜன் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






