என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடந்த இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாமில் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் நோயாளியை பரிசோதனை செய்த போது எடுத்த படம்.
இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்
- ஏராளமானோர் பங்கேற்றனர்
- 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது
வேலூர்:
காட்பாடியில் உள்ள இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது இதில் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி சங்கர் நோயாளிகளை பரிசோதனை செய்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சிடி ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது . காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. சங்கர் தலைமை தாங்கி நோயாளிகளை பரிசோதனை செய்து முகாமைதொடங்கி வைத்தார். இந்த முகாமில் இலவசமாக அறுவை சிகிச்சை ஆலோசனை, மகளிருக்கான மருத்துவ ஆலோசனை, இருதய ஆலோசனை, சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கான ஆலோசனை, டயாலிசிஸ் சிகிச்சை, தோல் வியாதி ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், அதில் அல்லாதவர்கள் சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
.இந்த முகாமில் மூலம் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக பிரச்சனைகள், தோல் வியாதிகள் ஆகியவற்றுக்கு மகப்பேறு நிபுணர் டாக்டர் லதா லட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கரண்சங்கர், அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் சீனிவாசன், தோல் மருத்துவ சிகிச்சை டாக்டர் ரூபன் ஜேசுதாஸ், சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.






