பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர் ஏகாம்பரேஸ்வரர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
பரமத்திவேலூர் ஏகாம்பரேஸ்வரர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com