search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்

    • நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    தினசரி ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். நல்லெண்ணெய், சீயக்காய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

    வெண்ணை காப்பு

    இந்த கோவிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் நடைபெறும்.

    மொத்தம் 120 கிலோ வெண்ணை மூலம் சுவாமிக்கு அலங்காரம் செய்து வெண்ணை காப்பு உற்சவம் நடைபெறும். இவ்வாறு வழிபட்டால் சுவாமி உள்ளம் குளிர்ந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

    முன்பதிவு

    தற்போது கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வெண்ணைய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    என கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×