பரமத்திவேலூரில் சாரல் மழை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.
பரமத்திவேலூரில் சாரல் மழை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர் பாண்டமங்கலம் வெங்கரை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங்குறிச்சி, குப்பிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசிராமணி, சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், சின்ன சோளி பாளையம், குமாரசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது.

இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com