என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasmine flower price hike"

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, தொடர் பனிபொழிவு உள்ளிட்டவை காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, தொடர் பனிபொழிவு உள்ளிட்டவை காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. பூ மொட்டுகள் உதிர்ந்து விடுவதால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

    இதன் காரணமாக சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது. பூக்கள் விலை ஒரு கிலோவுக்கு விவரம் வருமாறு:-

    மல்லிகை பூ ரூ.1600, முல்லை ரூ.1000, ஜாதிமல்லிகை ரூ.320, காக்கட்டான் ரூ. 400, கலர் காக்கட்டான் ரூ.400,  மலைக்காக்கட்டான் ரூ.360, அரளி ரூ.160, வெள்ளை அரளி ரூ. 160, மஞ்சள் அரளி ரூ.160, செவ்வரளி ரூ.180, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.120, சி.நந்திவட்டம் ரூ.120 என விற்பனை ஆகிறது.

    கார்த்திகை மாதம் என்பதால் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பதால் பூக்களை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.

    இந்தநிலையில் கார்த்திகை தீபத்திருவிழா, கிருத்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×