என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 1600 ரூபாயாக உயர்வு
    X

    சேலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 1600 ரூபாயாக உயர்வு

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, தொடர் பனிபொழிவு உள்ளிட்டவை காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, தொடர் பனிபொழிவு உள்ளிட்டவை காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. பூ மொட்டுகள் உதிர்ந்து விடுவதால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

    இதன் காரணமாக சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது. பூக்கள் விலை ஒரு கிலோவுக்கு விவரம் வருமாறு:-

    மல்லிகை பூ ரூ.1600, முல்லை ரூ.1000, ஜாதிமல்லிகை ரூ.320, காக்கட்டான் ரூ. 400, கலர் காக்கட்டான் ரூ.400, மலைக்காக்கட்டான் ரூ.360, அரளி ரூ.160, வெள்ளை அரளி ரூ. 160, மஞ்சள் அரளி ரூ.160, செவ்வரளி ரூ.180, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.120, சி.நந்திவட்டம் ரூ.120 என விற்பனை ஆகிறது.

    கார்த்திகை மாதம் என்பதால் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பதால் பூக்களை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×