என் மலர்
நீங்கள் தேடியது "மீண்டும் வாகனங்கள் இயக்க வலியுறுத்தல்"
- புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரியிடம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் சென்று வருகிறது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் வழித்தடத்தில் விரிவுபடுத்தப்பட்ட புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரியிடம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பள்ளிபாளையத்தை சேர்ந்த பஸ் உரிமையாளர் பி.எஸ்.கே. என்கிற கந்தசாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து பள்ளிபாளையம் பஸ் நிலையம் வரை மேம்பாலம், சாலை விரிவாக்கம் பணி நடந்து வந்ததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் சென்று வருகிறது. தற்போது ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி முதல் ஆர்.எஸ். பிரிவு வரை சாலை விரிவாக்கம் பணி முடிந்து விட்டது. பணிகள் முடிக்கப்பட்ட இந்த புதிய சாலையில் வாகனங்கள் சீராக சென்று வர முடியும். இதுபற்றி நகராட்சி தலைவர், அதிகாரியிடம் விரிவுபடுத்தப்பட்ட புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது விரைவில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.






