என் மலர்
நாமக்கல்
- பரமத்திவேலூர் ஊதிய மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இதில் கட்டுரை, பேச்சு, ஓவியம், கதை சொல்லுதல், கவிதை, கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஊதிய மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் கட்டுரை, பேச்சு, ஓவியம், கதை சொல்லுதல், கவிதை, கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நூலத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் இளங்கோவன், வாசகர் வட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன், அசோக் லேலண்ட் ஓய்வு பாலசுப்ரமணி, பள்ளி ஆசிரியை, வாசகர் வட்ட உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், 3-ம் நிலை நூலகர் வனிதா, தினக்கூலி நூலக பணியாளர் சிந்து, நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பரிசு பொருட்களை மல்லிகா பாலு நன்கொடையாக வழங்கினார். விழாவின் முடிவில் வேலூர் ஊதிய மைய நூலகர் சாந்தி நன்றி கூறினார்.
- ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
அவர் திருச்செங்கோட்டில் அரசு ஆஸ்பத்திரி சிடி ஸ்கேன், சீதாராம் பாளையம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் உட்பட பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இன்று காலை கொல்லிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி கொல்லிமலை சென்று, இன்று காலை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, கொல்லி மலை வட்டம், சோளக்காடு-புதுவளவு நலவாழ்வு மையம் மற்றும் இலக்கியம்பட்டி நலவாழ்வு மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அமைச்சர் திடீரென ஆய்வுக்கு வந்த சம்பவம், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
- குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது.
இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு இந்த குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதி வரை செல்கிறது. ஆங்காங்கே துளையிட்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றி, அதன் பிறகு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ராஜவீதி பகுதி உள்ள சாலையில் குடிநீர் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 10 அடி ஆழத்துக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியமாக மாறிவிட்டன.
இது பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அதிகாரிகள், மோட்டாரை நிறுத்தி, குழாயில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பொது மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மோட்டார் கொண்டு வரப்பட்டு குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து சகஜமான நிலை ஏற்பட்டது.
- வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது.
- இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது. அதே போல் ஆங்காங்கே கிடக்கும் கழிவுகளில் கொசுக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை துன்புறுத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் சுற்றுவட்டாரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
- கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
- ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது.
பரமத்திவேலூர்:
கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை எலுமிச்சம்பழம் ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது. எலுமிச்சை பழம் விலை சரிவால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து வியாபாரி கூறுகையில், தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சென்று எலுமிச்சை பழங்களை வியாபாரிகள் வாங்கி வருகிறார்கள்.
தற்போது கோடை மழை, அவ்வப்போது பெய்து வருவதால் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது. வரும் நாட்களில் எலுமிச்சை பழம் மேலும் விலை சரிவடைய வாய்ப்புள்ளது என கூறினார்.
- தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
- வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது.
நாமக்கல்:
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிவில் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த, மே 1-ந் தேதி முதல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலைக்கு முட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலையை என்.இ.சி.சி. நிர்ணயம் செய்வது போல், எக்ஸ்போர்ட் முட்டைக்கும் விலை நிர்ணயம் செய்கிறது.
அதேபோல், சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கும், என்.இ.சி.சி. விலை நிர்ணயம் செய்ய உள்ளது. அந்த விலைக்கு மட்டுமே முட்டையை கொள்முதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை வைக்க உள்ளோம்.
தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு, தினசரி 50 முதல், 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பண்ணைகளில், முதிர்வு கோழிகள் அதிக அளவில், விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதனால், பள்ளிகள் திறந்ததும், முட்டை நுகர்வு அதிகரித்து, அதன் மூலம் கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
- லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.
நாமக்கல்:
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.
இந்நிலையில் லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிகபாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் கமிஷனர்களிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கின்றனர்.
இதனை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் லாரி, டிரெய்லர், டேங்கர், மினி லாரி, மணல் லாரி, தண்ணீர் டேங்கர் லாரி உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இது அடையாள உண்ணாவிரதப் போரட்டம் தான். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் டாக்டர் சண்முகப்பா ஆலோசனையின் பேரில், காலவரையற்ற லாரி நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளா ளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
- வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, ஆனங்கூர், அண்ணா நகர், பாண்டமங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாக னங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்ற னர். இவர்கள் பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.
அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடு கின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறி கொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் அவ்வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.
எனவே, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
- தானியங்களை கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளை யம், சின்ன மருதூர், கண்டி பாளையம், கபிலர்மலை, பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பகுதிகளில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவை விவசாயிகள் பயிர் செய்துள்ள பகுதிகளுக்கு சென்று, தானியங்களை கொத்தி நாசப்படுத்தி வரு கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வனத்து றையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி, இந்த வாரம் நடந்த ஏலத்தில் 158.04 குவிண்டால் எடை கொண்ட 461 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் என ரூ.11 லட்சத்து 84ஆயி ரத்து 441-க்கு விற்பனையானது.
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் முதல் தரம் ரூ.71 முதல் ரூ.81 வரையிலும், 2-ம் தரம் ரூ.56 முதல் ரூ.67 வரையிலும் விலை போனது. மொத்தம் 75 மூட்டைகள் ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொது மக்களின் புகார் நட வடிக்கைகளை எளிதாக்கும் வகையில், விபரங்களை மிக எளிமையாக தேர்ந்தெ டுக்கும் வசதிகளுடன், புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகா தாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, உணவு தொடர்பான பொதுமக்க ளின் புகார் நடவடிக்கை களை எளிதாக்கும் வகையி லும், விரைவு நடவடிக்கை எடுக்கவும், புதிய வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்பை, தமிழக அரசு அறிமுகப்படுத்திள்ளது.
அதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல், மிக எளிமையாக விபரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வெப்சைட் foodsafety.tn.gov.in மற்றும் மொபைல் செயலி Tnfood safety Consumer App டவுன் லோடு செய்து எளிதாக பயன்படுத்தலாம். எனவே வெப்சைட் மூலமாகவும், செல்போன் ஆப் மூலமாகவும், பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.
புகார் செய்பவர்களின் விபரங்கள், ரகசியம் பாது காக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள், ஆய்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, புகார்தாரருக்கு ஆய்வ றிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






