விளைச்சல் அதிகரிப்பால் எலுமிச்சம் பழம் விலை வீழ்ச்சி

கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது.
பரமத்திவேலூர் பகுதியில் தள்ளுவண்டியில் எலுமிச்சம் பழம் குவித்து வைத்து விற்பனை செய்வதை படத்தில் காணலாம்.
பரமத்திவேலூர் பகுதியில் தள்ளுவண்டியில் எலுமிச்சம் பழம் குவித்து வைத்து விற்பனை செய்வதை படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை எலுமிச்சம்பழம் ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது. எலுமிச்சை பழம் விலை சரிவால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து வியாபாரி கூறுகையில், தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சென்று எலுமிச்சை பழங்களை வியாபாரிகள் வாங்கி வருகிறார்கள்.

தற்போது கோடை மழை, அவ்வப்போது பெய்து வருவதால் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது. வரும் நாட்களில் எலுமிச்சை பழம் மேலும் விலை சரிவடைய வாய்ப்புள்ளது என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com