என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை கால"

    • பரமத்திவேலூர் ஊதிய மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில் கட்டுரை, பேச்சு, ஓவியம், கதை சொல்லுதல், கவிதை, கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஊதிய மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் கட்டுரை, பேச்சு, ஓவியம், கதை சொல்லுதல், கவிதை, கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நூலத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் இளங்கோவன், வாசகர் வட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன், அசோக் லேலண்ட் ஓய்வு பாலசுப்ரமணி, பள்ளி ஆசிரியை, வாசகர் வட்ட உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், 3-ம் நிலை நூலகர் வனிதா, தினக்கூலி நூலக பணியாளர் சிந்து, நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பரிசு பொருட்களை மல்லிகா பாலு நன்கொடையாக வழங்கினார். விழாவின் முடிவில் வேலூர் ஊதிய மைய நூலகர் சாந்தி நன்றி கூறினார்.

    ×