என் மலர்
நாகப்பட்டினம்
- வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
- 2500 தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் தொடங்கி வைத்தார்.
வக்கீல் அருண் ஷோரி முன்னிலை வகித்தார்.
முதல் கட்டமாக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என சுர்ஜித் சங்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபால், முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, வட்டார பொருளாளர் மணிஷ், பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர துணை தலைவர் கார்த்தி, நகர துணை செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் மகளிர் அணி மாலா, நகர செயலாளர்கள் சுரேஷ், ஹரி, சென்னை ராஜா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது கடலில் தவறி விழுந்துள்ளார்.
- 20 மணி நேரத்திற்கு பிறகு மாயமான மாணவனின் உடல் மீட்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், காமே ஸ்வரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ஞானசேகர் (வயது 20) இவர் நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று தனது தாத்தா கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப் படகில் தனது தந்தை சந்திரசேகரனுடன் மீன்பிடிக்க அதிகாலை கடலுக்கு சென்றுள்ளனர்.
மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் பொறியியல் படித்து வரும் ஞானசேகர், கடல் அலையின் வேகத்தால் தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.
தகவல் அறிந்த வேளாங்க ண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருடன் மீன்வர்களும் படகு மூலம் மாயமான இளைஞரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மாணவன் கிடைக்காததால் மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படகுகளின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடற்க ரையோரம் நண்டு கள் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் உயிரிழந்த நிலையில் மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
சுமார் 20 மணி நேரம் தேடலுக்கு பிறகு கடலில் மாயமான மாணவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளில் தனது தாத்தாவின் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
- மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் வெங்கடேச குருக்கள் தலைமையில் சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தொடர்ந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர், சிங்கப்பூர் தொழிலாளர் சபா பவுர்ணமி குழுயாக பூஜை தலைவர் துரை அரசன், தொழிலதிபர்கள்சிங்கப்பூர் சபாரெத்தினம், தோப்புத்துறை ஆரிபா, இந்து நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், வீரராசு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம்முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம், இந்து நற்பணி மன்றத்தினர், தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
- பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, நேற்று இரவு அஸ்த்ரா யாகம் நடைபெற்று.
பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு மஞ்சள், தாலி கயிறு, குங்குமம், வளையல், 50-க்கும் மேற்பட்ட பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பின், பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வேளாங்கண்ணி பழைய காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கடைத்தெரு, பேராலயம் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
அப்போது மது மற்றும் போதை பொருட்களால் எற்படும் தீமைகளை குறித்தும் குடிக்கும், போதைக்கும், யாரும் அடிமையாகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள், என 300, க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கடற்கரை அருகே உள்ள பூங்கா வரை சென்றனர்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வேதாராண்யம்:
வேதாராண்யம் உபகோட்டத்திற்க்கு உட்பட்ட வேதாரண்யம் 110 கே.வி துணை மின் நிலையம், வாய்மேடு 110 கே.வி துணை மின் நிலையம், ஆயக்காரன்புலம் 33 கே.வி துணை மின் நிலையம், வேட்டைகாரன் இருப்பு 33 கே.வி. துணை மின் நிலையம் ஆகிய நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்பு த்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பாவனம் தொண்டியக்காடு, தாணி க்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடி நெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்கு டையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியா ப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ள ப்பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
- அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
- அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வளா்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி,கணபதிபுரம், திருக்கண்ணபு ரம்,திருப்பத்தாங்குடி உள்ளிட்ட ஊா்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது. இருப்பினும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவா்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்ட வா்களும்,விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவா்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அங்கு இரவுப் பணியில் இருக்கும் செவிலியா்கள் முதல் உதவி மட்டும் செய்துவிட்டு உடனடியாக நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனா்.
எனவே, இப்பகுதிகளில் இரவு நேரத்திலும் முழு சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவு நேரப்பணியில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- மக்கும் குப்பை, மக்கா குப்பை என தினமும் 12 டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.
- 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ. 65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 வாகனம் வாங்கபட்டது . இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் பணியினை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு இரண்டு டன் குப்பபைகளை அள்ளும் 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.
இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது ;-
இந்த வாகனங்கள் மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என நாள்தோறும் 12 டன் குப்பைகள் அள்ளபட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லபடும்.
அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி சலுகை விலையில் விலையில் வழங்கப்படும். மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ளப்படும் என்றார்.
- மாணிக்கவாசகரின் சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- அவரது படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு நடராஜசுவாமி சன்னதியில் மாணிக்கவாசகர் உருவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பின்னர் நடராஜர், தியாகராஜசுவாமிகள், மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள மாணிக்கவாசக சுவாமிகள் மடத்தில் மாணிக்கவாசகர் உருவ படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது.
இதில் யாழ்பாணம் கரணவாய் வரணி ஆதினம் மற்றும் மாணிக்கவாசக மடத்தின் தர்மகர்த்த செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஆதிவார மடம் நிர்வாகி குமரேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனர்.
கோயில் ஓதுவார் மூர்த்தி பரஞ்சோதி ஓதுவார் தலைமையில் தேவார திருப்பதிகம் பாடப்பட்டது. அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.
- அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
- சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.
திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.
- உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய 621 காலி பணியிடங்களுக்கான தேர்விற்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவிக்கையின்படி இணைய வழி விண்ணப்பம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு ள்ளது.எனவே, நாகை மாவட்ட த்தை சேர்ந்த கல்வி தகுதியுள்ள அனைவரும், இந்த காவலர் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்து நாகப்ப ட்டினம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெ றி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறுப வர்களுக்கு அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்க ப்படும். இப்பயிற்சி யில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






