என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் விழுந்து மாயமான கல்லூரி மாணவர் உடல் மீட்பு
    X

    உயிரிழந்த மாணவர் ஞானசேகர்.

    கடலில் விழுந்து மாயமான கல்லூரி மாணவர் உடல் மீட்பு

    • மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது கடலில் தவறி விழுந்துள்ளார்.
    • 20 மணி நேரத்திற்கு பிறகு மாயமான மாணவனின் உடல் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், காமே ஸ்வரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ஞானசேகர் (வயது 20) இவர் நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று தனது தாத்தா கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப் படகில் தனது தந்தை சந்திரசேகரனுடன் மீன்பிடிக்க அதிகாலை கடலுக்கு சென்றுள்ளனர்.

    மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் பொறியியல் படித்து வரும் ஞானசேகர், கடல் அலையின் வேகத்தால் தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    தகவல் அறிந்த வேளாங்க ண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருடன் மீன்வர்களும் படகு மூலம் மாயமான இளைஞரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மாணவன் கிடைக்காததால் மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படகுகளின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் கடற்க ரையோரம் நண்டு கள் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் உயிரிழந்த நிலையில் மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

    சுமார் 20 மணி நேரம் தேடலுக்கு பிறகு கடலில் மாயமான மாணவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாளில் தனது தாத்தாவின் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×