என் மலர்
நாகப்பட்டினம்
நாகூர் அருகே நடுரோட்டில், சுற்றி வளைத்து தொழிலாளியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்:
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நாகூர் அருகே பட்டப்பகலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை அருகே நரிமணம் விசி லட்சியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் என்கிற விஜயபாபு(வயது 42). இவரது மனைவி முத்துலட்சுமி(32). இவர்களுக்கு கயல்(3), வானதி(2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் கிழக்கு கடற்கரை சாலையில் செந்தில், பஞ்சர் ஒட்டும் கடை வைத்து இருந்தார்.
நேற்று காலை செந்தில், கடையை திறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் முட்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர், செந்தில் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்கள் யார்? எதற்காக தனது மோட்டார் சைக்கிளை வழிமறிக்கிறார்கள் என்று செந்தில் சுதாரிப்பதற்குள் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், செந்திலை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நாகூர் அருகே பட்டப்பகலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உரிய விலை நிர்ணயிக்காததை கண்டித்து கொள்ளிடம் அருகே பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நாகை, கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏலம் மூலமாக விற்பனை செய்வது வழக்கம். வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறும்.
அதன்படி நேற்று முன்தினம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வாங்க வியாபாரிகள் வராததால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டு நேற்று ஏலம் நடந்தது.
அப்போது விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியில் தரமான பருத்தியை தேர்வு செய்து ஒரு குவிண்டால் விலை ரூ5,550 என நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. தேர்வு செய்ததுபோக மீதம் உள்ள பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,800 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் எருக்கூரில் சிதம்பரம்-சீர்காழி சாலையில் பருத்தி மூட்டைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ரகுராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித பாரபட்சமும் இன்றி விலை நிர்ணயம் செய்து பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதனால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு, மீன்பிடி தடைக்காலத்தால் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தடைக்காலத்துக்கு முன்பாகவே மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
எனவே கொரோனா வைரஸ் காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் நலன் கருதி தடைக்காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைய வேண்டியதை மத்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் ஜூன் 1-ந் தேதியுடன் முடிவடைவதாக அறிவித்தது.
ஆனால் நாகை அக்கரைப்பேட்டை, சீச்சாங்குப்பம், கல்லாறு, நாகூர் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் விசைப்படகு மீன்பிடி தொழிலில் சமூக இடைவெளியை பின்பற்றவும், ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு இல்லை. எனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது என்று கூறி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை விசைப்படகு மூலம் மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்திருந்தனர். இதனால் நாகை மாவட்டத்தில் மேற்கண்ட 9 மீனவ கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் விசைப்படகுகள் மூலம் தொழில் செய்யும் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்ட மீனவர்கள் தவிர மற்ற மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை தொடங்கினர்.
இந்த நிலையில் நாகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று(திங்கட்கிழமை) முதல் மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் விசைப்படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு விசைப்படகுகள் தயாராக இருந்தன. மேலும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் ஐஸ் கட்டி ஏற்றுதல், டீசல் நிரப்புதல், மீன்பிடி வலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்ற தொடங்கினர்.
நேற்று அதிகாலை முதல் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுக்கு பூஜைகள் போட்டு ஒன்றன்பின் ஒன்றாக மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் டோக்கன் முறைப்படி நாள் ஒன்றுக்கு 40 படகுகளில் கொண்டு வரப்படும் மீன்கள் மட்டுமே நாகை துறைமுகத்தில் விற்பனை செய்ய முடியும். இதில் ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் ஒருவார காலத்துக்கு பிறகே கரை திரும்பும். 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றதால் வகை வகையான மீன்களை வாங்கி சுவைத்த மீன்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாகை மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 202 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் சென்னை மற்றும் கேரளாவில் இருந்து நாகை வந்தவர்கள் ஆவர். புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. இதில் 84 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை கடைமடை பகுதியை நேற்று மேட்டூர் அணை நீர் அடைந்தது. இந்த தண்ணீரில் மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
வேளாங்கண்ணி:
மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் அணையில் இருக்கும் நீர் இருப்பை பொருத்தும் அணைக்கான நீர்வரத்து பொருத்தும் ஜூன் மாதம் 12-ந் தேதி அல்லது காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்படும்.
தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 16-ந் தேதி நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது.
கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாண்டவையாற்றின் மூலம் நாகை மாவட்டம் கடைமடை பகுதியான கீழையூர் ஒன்றியம் இறையான்குடி தடுப்பணைக்கு நேற்று வந்தடைந்தது. இந்த ஆற்றின் மூலம் இறையான்குடி ,வடக்கு பனையூர், தெற்கு பனையூர், வல்லவன்கோட்டகம், கலத்திடல்கரை, மகிழி உள்ளிட்ட சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
இறையான்குடிக்கு வந்த தண்ணீரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் மலர், விதைநெல்லை தூவியும் வரவேற்றனர். இதில் ஊராட்சி தலைவர் சேகர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி கமல்வாணி (வயது 26). இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கமல்வாணி நேற்றுமுன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமல்வாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன கமல்வாணிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொறையாறு:
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் மதியரசன், வரித்தண்டலர் கருணாநிதி, பதிவு எழுத்தர் மோகன் உள்ளிட்டோர் தரங்கம்பாடி, பொறையாறு, காத்தான்சாவடி, ராஜீவ்புரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
வேதாரண்யம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வர்ஜினியா மற்றும் போலீசார் புஷ்பவனம் பகுதியில் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புஷ்பவனம் திரவுபதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன்(வயது44) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் சிங்கன் குத்தகை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது உறவினர் மணிகண்டன் என்பவருடன் வாய்மேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வாய்மேடு அருகே மருதூர் பிள்ளையாரடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மகாலிங்கம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம்:
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி நாகை மாவட்டத்தில் 181 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் வெளி மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டிருந்த நபர், நாகை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீர்காழி அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முககவசம் அணியாமல் வெளியே சென்றவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ரூ.100 அபராதம் விதித்தனர்.
விவசாயிகளிடம் இருந்து 100 சதவீத வெளிப்படைத்தன்மையுடன் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம், பிரதாபராமபுரம் மற்றும் சோழவித்யாபுரம் கிராமங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராமப்புறங்களில் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகச்சிறந்த அம்சமாக பால் உற்பத்தி அமைந்துள்ளது. நமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், தஞ்சாவூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலில் உள்ள கொழுப்புச்சத்து அளவீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்குரிய தொகை 10 நாட்களுக்குள் இ.சி.எஸ். மூலம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலினை விவசாயிகள் தாங்கள் விரும்பும் இடத்திலேயே சங்கம் அமைத்து விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பணியினை தஞ்சாவூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேதையன், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, பிராதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.