என் மலர்
செய்திகள்

அமைச்சர் ஓஎஸ் மணியன்
100 சதவீத வெளிப்படைத்தன்மையுடன் பால் கொள்முதல்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்
விவசாயிகளிடம் இருந்து 100 சதவீத வெளிப்படைத்தன்மையுடன் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம், பிரதாபராமபுரம் மற்றும் சோழவித்யாபுரம் கிராமங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராமப்புறங்களில் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகச்சிறந்த அம்சமாக பால் உற்பத்தி அமைந்துள்ளது. நமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், தஞ்சாவூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலில் உள்ள கொழுப்புச்சத்து அளவீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்குரிய தொகை 10 நாட்களுக்குள் இ.சி.எஸ். மூலம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலினை விவசாயிகள் தாங்கள் விரும்பும் இடத்திலேயே சங்கம் அமைத்து விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பணியினை தஞ்சாவூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேதையன், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, பிராதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story