என் மலர்
செய்திகள்

பெண் தற்கொலை
கொள்ளிடம் அருகே பெண் தற்கொலை
கொள்ளிடம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி கமல்வாணி (வயது 26). இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கமல்வாணி நேற்றுமுன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமல்வாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன கமல்வாணிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story