என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நாகை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்வு

    நாகை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி நாகை மாவட்டத்தில் 181 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் வெளி மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டிருந்த நபர், நாகை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டார்.

    இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×