என் மலர்
செய்திகள்

கொள்ளிடம் அருகே பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
உரிய விலை நிர்ணயிக்காததை கண்டித்து பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
உரிய விலை நிர்ணயிக்காததை கண்டித்து கொள்ளிடம் அருகே பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நாகை, கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏலம் மூலமாக விற்பனை செய்வது வழக்கம். வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறும்.
அதன்படி நேற்று முன்தினம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வாங்க வியாபாரிகள் வராததால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டு நேற்று ஏலம் நடந்தது.
அப்போது விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியில் தரமான பருத்தியை தேர்வு செய்து ஒரு குவிண்டால் விலை ரூ5,550 என நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. தேர்வு செய்ததுபோக மீதம் உள்ள பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,800 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் எருக்கூரில் சிதம்பரம்-சீர்காழி சாலையில் பருத்தி மூட்டைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ரகுராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித பாரபட்சமும் இன்றி விலை நிர்ணயம் செய்து பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதனால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story