என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வேதாரண்யம் நகர் பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் மந்திதோப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராசு (வயது 48), வேதாரண்யம் தெற்கு பகுதி சேது சாலையை சேர்ந்த செல்வராஜ் (55) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மறைந்து வைத்திருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). கொத்தனார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ராஜேஷ், சிறுமி வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதில் சுயநினைவை இழந்த அந்த சிறுமியை, ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் இதுகுறித்து தங்கள் மகளிடம் கேட்டுள்ளனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தி செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் திருமணம் செய்த புதுப்பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரி சாமி. இவருடைய மகள் சுமதி (வயது 26). இவரும், பஞ்சநதிக்குளம் மேல சேத்தியை சேர்ந்த ஜெகநாதன் மகன் செல்வ குமார்(28) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் செல்வக்குமார் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்.
கடந்த 15-ந் தேதி செல்வ குமார் வெளிநாட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். மறுநாள்(16-ந் தேதி) காலை சுமதியின் பெற்றோர் முன்னி லையில் செல்வகுமார், சுமதிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் அவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மதியம் 1 மணி அளவில் வேதாரண்யம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய ஒரு காரில் சுமதி, செல்வகுமார் மற்றும் சுமதியின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அங்கு காரை விட்டு சுமதி இறங்கியபோது அவரை கீழே தள்ளிவிட்டு, செல்வகுமாரை பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பஞ்சநதிக் குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த குமார், மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுமதி, வேதாரண்யம் போலீசில் தனது கணவரை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், தனது கணவரை உடனடியாக மீட்டுத்தரக்கோரியும் சுமதி தனது உறவினர்களுடன் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட் டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வி வர்ஜீனியா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் விவசாயியின் கை முறிந்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே கழனிவாசல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி விஜயா மற்றும் தாயாருடன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு பால்ராஜ் எழுந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் பார்த்தபோது அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.
உடனே பால்ராஜ், அவர்களை தடுக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் பால்ராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவரின் கை முறிந்தது. சத்தம் கேட்டு கண்விழித்த பால்ராஜின் மனைவி விஜயா கொள்ளையர்களிடம் இருந்து தனது கணவரை காப்பாற்ற போராடினார். கணவன்-மனைவி இருவரும் போராடியபோது கொள்ளையர்கள் பீரோவில் இருந்து எடுத்த 7 பவுன் சங்கிலியை தவற விட்டனர்.
இந்த சம்பவத்தின்போது கொள்ளையர்கள் விஜயாவை தாக்கி அவர் அணிந்து இருந்த தாலி சங்கிலியை பறித்தனர். சங்கிலியை பறிக்க விடாமல் மர்ம நபர்களிடம் விஜயா போராடியதால் பாதி சங்கிலி மட்டும் தப்பியது. கொள்ளையர்களிடம் 5 பவுன் சங்கிலி சிக்கிக்கொண்டது. கொள்ளையர்கள் சங்கிலியை பறித்ததில் விஜயாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வருவதை அறிந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்து எடுத்த ரூ.50 ஆயிரம் மற்றும் விஜயாவிடம் பறித்த 5 பவுன் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் சூறாவளி காற்று வீசியதால் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்பட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. பல மணி நேரம் தொடர்ந்து சூறாவளி காற்று வீசியது.
ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றுடன் புழுதியும் பறந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மீனவ கிராம பகுதியில் கடல் சீற்றமும் இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்கள் படகுகளை பத்திரமாக ஆங்காங்கே கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் படகுகள், வலைகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே சில மீனவர்கள் கடற்கரை ஓரங்களில் கரைவலை போட்டு மீன் பிடிக்கிறார்கள். குறைந்த அளவு மீன்களே பிடிபடுகிறது.
சீர்காழியில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின.
சீர்காழி:
சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் கடிகாரம் மற்றும் செல்போன் கடை நடத்தி வருபவர் சுரேஷ்குமார் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் எதிர்பாராமல் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கடிகாரங்கள், செல்போன்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கினார்.
அப்போது கூட்டுறவு சங்க துணை தலைவர் மணி, வக்கீல் நெடுஞ்செழியன், தகவல் தொழில் நுட்ப மாவட்ட துணை செயலாளர் பரணிதரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
நாகையில் ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ் ஏட்டின் மனித நேயத்துக்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வாய்மேடு :
நாகை மாவட்டம் வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெவ்வேறு இடங்களில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பிணமாக கிடந்தனர். இருவருடைய உடல்களையும் போலீசார் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடைய உடலை பெற்றுக்கொள்வதற்கு ஆட்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய மருத்துவமனை முடிவு செய்தது.
இந்தநிலையில் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சாவித்ரி என்பவர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்களை எடுத்துச்சென்று நாகையில் உள்ள ஒரு மயானத்தில் அடக்கம் செய்தார்.
முன்னதாக அவர், இறந்தவர்களின் உறவினர்களை போன்று இருவரின் உடல்களின் மேல் மஞ்சள் தெளித்து, வாய்க்கரிசி போட்டு இறுதி சடங்குகளையும் செய்தார். ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ் ஏட்டின் மனித நேயத்துக்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்தவர் மா.மீனாட்சி சுந்தரம்(வயது 84). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி சுந்தரம் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் வேதாரண்யத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தி.மு.க. நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் மீனாட்சி சுந்தரம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு அவர் பிறந்த ஊரான ஆயக்காரன்புலத்தில் உள்ள அவரது அண்ணன் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
மரணம் அடைந்த மா.மீனாட்சி சுந்தரம் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், வேதாரண்யம் நகரசபை தலைவராகவும், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் இவருக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.
மரணம் அடைந்த மீனாட்சி சுந்தரத்துக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், புகழேந்தி, அன்பரசு ஆகிய மகன்களும் உள்ளனர்.

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே காக்கழனி தேரடி தெருவில் சாராயம் விற்ற சாவித்திரி (வயது55), ராதாமங்கலம் காலனி தெருவில் சாராயம் விற்ற சாரதாம்பாள் (63), ராதாமங்கலம் எறும்புகன்னி பகுதியில் சாராயம் விற்ற முருகையன் (47), நீலப்பாடி கடைத்தெருவில் சாராயம் விற்ற பிரபாகரன் (27), சதீஷ் (29) ஆகிய 5 பேரை கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரிடம் இருந்தும் தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நரிமணம் ஊராட்சியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் நரிமணம், சுல்லாங்கால், வெள்ளப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர்கள் மணிவேல், கார்த்திக் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி, துணை தலைவர் ராமதாஸ், ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் பரமநாதன், பிரபாகரன், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காமேஸ்வரம் ஊராட்சியில் திருப்பூண்டி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் ஊராட்சியில் திருப்பூண்டி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்பட 125 பேர் கலந்து கொண்டனர். முகாமில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி, ஊராட்சி தலைவர் ஜெய்சுதா, ஒன்றியக்குழு துணை தலைவர் சவுரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகூரில் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூரில் நாகநாதர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு சொந்தமான குளம் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படும். ஏலம் எடுத்தவர்கள் குளத்தில் வளரும் மீன்களை பிடித்து விற்பனை செய்வார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு ஏலம் விடப்படவில்லை.
கோவில் நிர்வாகம் சார்பில் குளத்தை பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் குறைவான தொகைக்கு குளம் ஏலம் போனதால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்துக்கு குளிக்க சென்றனர். அப்போது குளத்தின் ஓரம் மீன்கள் செத்து மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரை எடுத்து நுகர்ந்து பார்த்தபோது விஷம் கலந்து இருப்பது போல் வாசம் அடித்தது. மேலும் குளத்தின் நிறமும் மாறி இருந்தது. இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். குளத்தில் மீன்களை கொல்வதற்காக விஷம் கலக்கப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது நாகூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.