என் மலர்
நாகப்பட்டினம்
நாகூர் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்று வர மறுத்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர்:
நாகூர் அருகே உள்ள வடகுடி தோப்பு தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் கண்ணன் (வயது33). தொழிலாளி. இவருக்கு வைஷ்ணவி (28) என்ற மனைவியும், தர்சன் என்ற மகனும் உள்ளனர். கண்ணன்-வைஷ்ணவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவி கணவரிடம் கோபித்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து கண்ணன் அங்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு வைஷ்ணவியை அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக மனவேதனை அடைந்த கண்ணன் சம்பவத்தன்று வடகுடியில் உள்ள தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறும் சாலை அருகே சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன், நாகை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் அந்த பகுதியில் கிடக்கும் குப்பைகள் சேரிப்பவர் என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கோடியக்கரை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்று பேசிக்கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் ஒருவர் சுரேஷ்(வயது 31) என்றும், அவர் கையில் வைத்திருந்த செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை செய்து வைத்திருந்த ரூ.200-ஐ கைப்பற்றினர். மேலும் இதில் தொடர்புடையவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகை பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது காற்றின் வேகத்தில் டீக்கடை பாய்லர் பறந்தது.
நாகப்பட்டினம்:
நாகையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கியது. இதனால் சிறுவர் முதல் முதியவர் வரை பெரும் அவதிப்பட்டு வந்தனர். பகலில் இருந்த வெயிலின் தாக்கம் இரவில் வெப்பமாக தென்பட்டதால் குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்தநிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்திற்கு பின்னர் வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 4.15 மணி அளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.
சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக நாகை தாமரைக்குளம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்தது. இதனால் நகர துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பப்ளிக் ஆபீஸ் ரோடு, காடம்பாடி, நம்பியார் நகர் உள்ளிட்ட இடங்களில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதனால் நாகை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் நிலையம் உள்பட நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதேபோல் வேளாங் கண்ணி, சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், பொறையாறு, கொள்ளிடம், செம்பனார் கோவில் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பலத்த மழையால் நாகை சுற்று வட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த இதமான சூழ்நிலை நிலவியது. மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சிக்கல்:
ழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அகிலன் தலைமையில் மருத்துவர் குழு மற்றும் பொதுசுகாதாரத்துறை ஆய்வக தொழில் நுட்ப அலுவலர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் அருண் மணிகண்டன் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுகுணா, ஊராட்சி உறுப்பினர்கள் வேம்பு, ரமேஷ், பூபதி, சுரேஷ், ஊராட்சி செயலாளர் செல்லத்துரை மற்றும் அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு:
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள பாகசாலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆலவேலி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 40). விவசாயியான இவருடைய மனைவி உமாராணி(35). இவர், மகளிர் குழுவில் கடன் வாங்கி வீட்டு செலவுக்கு பயன்படுத்தினார். சம்பவத்தன்று சிவக்குமார் தனது மனைவி உமாராணியிடம் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது உமாராணி பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மனைவி உமாராணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து பாகசாலை போலீசார் சிவக்குமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உமாராணி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாகசாலை போலீசார், முன்பு பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட உமாராணிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.
வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே சிக்கலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரபோஜி, ஒன்றிய செயலாளர் பகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அத்தியாவசிய திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகிய வேளாண் சட்ட மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக புதுப்புது சட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்தனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் 25 பேரை கைது செய்தனர்.
இதேபோல் கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேலப்பிடாகை கடைத்தெருவில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன் மற்றும் இந்திய ஜனாநாயக மாதர் சங்க மாவட்டசெயலாளர் லதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மேலப்பிடாகையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கீழையூர் போலீசார் கைது செய்தனர்.
கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த விவசாய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் கீழையூரில் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வீரப்பன், விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகி செங்குட்டுவன், ஒளி சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலம் கடைத்தெருவில் நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் அபூபக்கர், கிருஷ்ணமூர்த்தி. முத்தையன், மீரா, மகாலிங்கம், பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தினால் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமருகல் அருகே அண்ணாமண்டபம் மெயின்ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமருகல் பஸ் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நாகை மாவட்டத்தில் 16 இடங்களில் நடந்த சாலைமறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர்கள் மணிவேல், பிரித்திவிராஜ், சுகாதார ஆய்வாளர்கள் பரமநாதன், பிரபாகர் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். முகாமை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் பார்வையிட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனிபாலாஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ஆனந்த ஜோதி(வயது 53). இவர், கொள்ளிடம் ஒன்றியம் ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(49). இவர்களுக்கு சுரேஷ்(26) என்ற மகனும், சுவாதி(20) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 18-ந் தேதி அதிகாலையில் சித்ரா எழுந்து தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர், கோலம் போட்டுக் கொண்டிருந்த சித்ராவின் தலையில் இரும்பு பைப்பால் தாக்கினார். பின்னர் முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சித்ரா பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சீர்காழி நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டு மாடியில் குடியிருந்து வரும் செல்வகுமார் என்பவரின் மனைவி பிருந்தாவின் செல்போன் எண்களையும் கண்காணித்து வந்தனர்.
அப்போது பிருந்தா, சீர்காழி அருகே கணபதி நகரை சேர்ந்த தாஜூதீன் மகன் சையது ரியாசுதீன்(29) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியாக உள்ள சையது ரியாசுதீன், ஜல்லி எம்-சாண்ட் வியாபாரமும் செய்து வந்தார்.
இதனையடுத்து போலீசார் சையது ரியாசுதீனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சையது ரியாசுதீன், சித்ராவை தான் கொலை செய்ததாக கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து சீர்காழி போலீசார் சையது ரியாசுதீனிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது சையது ரியாசுதீன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
சீர்காழி அருகே சேத்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகள் பிருந்தா(27) என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு சீர்காழியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் சையது ரியாசுதீன் சந்தித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிருந்தாவை அவரது பெற்றோர், கடந்த 2016-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் கீரைக்கார தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இவர்களுக்கு 3 வயதில் லக்கி சாய் என்ற மகன் உள்ளான். பிருந்தாவின் கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இவர்களுக்கு இடையே அடிக்கடி நெருக்கம் அதிகரித்ததால் பிருந்தா தனது கைக்குழந்தையோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீர்காழி வந்து விட்டார். கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டின் மாடியில் ஒரு பகுதியில் வாடகைக்கு குடியிருந்தார்.
தனியாக வசித்து வரும் பிருந்தாவின் வீட்டிற்கு சையது ரியாசுதீன் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் சித்ராவிடம் புகார் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை சித்ரா பலமுறை கண்டித்துள்ளார். அதை இருவரும் கேட்காமல் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். இதனால் தனது வீட்டை காலி செய்யுமாறு சித்ரா பிருந்தாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலர்கள் இருவரும் தங்கள் உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் சித்ராவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
தினமும் அதிகாலையில் எழுந்து சித்ரா வாசலில் கோலம் போடுவார் என பிருந்தா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்துள்ளார். கடந்த 18-ந் தேதி அதிகாலையில் முன்கூட்டியே சித்ராவின் வீட்டு வாசல் முன்பு மறைவான பகுதியில் இரும்பு பைப்புடன் சையது ரியாசுதீன் தயாராக இருந்து உள்ளார். அப்போது வழக்கம்போல் கோலம் போட வந்த சித்ராவின் தலையில் இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்து உள்ளார்.
அவர் இறந்ததை உறுதி செய்த பின்பு இரும்பு பைப்பை அருகில் இருந்த கழுமலை ஆற்றோரம் வீசிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று உள்ளார். மறுநாள் ஒன்றும் தெரியாததுபோல் கள்ளக்காதலியை சந்தித்து சென்று உள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது ரியாசுதீனை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பிருந்தா மீதும் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே சங்கமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த கந்தன் (வயது41), பழையனூர் மேல்பாதியை சேர்ந்த சத்தியராஜ் (35), சங்கமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி (47) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அவுரி திடலில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் 3 மாதங்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500 வழங்க வேண்டும்.
பொது முடக்க காலத்தில் ஆட்குறைப்பு, பணி நீக்கம், சம்பளம் குறைப்பு செய்வதை கைவிட வேண்டும். கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு நல வாரியங்களில் பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க நடைமுறையில் இருக்கும் கடினமான நிபந்தனைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி ரூ.310 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தை சேர்ந்தவர்கள், அரசு பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீழ்வேளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் அங்காடி சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் வசந்தி, ஏ.ஐ.டி.யூ.சி. பொருளாளர் அம்பேத்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி.யை சேர்ந்த பக்கிரிசாமி, முருகையன், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி நாகையில், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அவுரி திடலில் நேற்று மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி தனபாலன் தலைமை தாங்கினார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சேரன், அமைப்பாளர் வேதமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர் பக்கிரிசாமி, நாகை நகர செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் அனைத்தும் வேளாண்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. விளைபொருள்களை கட்டுப்பாடின்றி இருப்பு வைத்து விற்பனை செய்யும் வசதி முழுமையாக பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் விளைபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். சிறு-குறு விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். கள்ளச்சந்தை பெருகும். விவசாயத்தை அழிக்கும் வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் அன்னிய நிறுவனங்களை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கைவிலங்கு போடும் சூழ்நிலை ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கைகளை சங்கிலியால் கட்டி விலங்கு போட்டுக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.