என் மலர்
நாகப்பட்டினம்
கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இனி 6 மாதங்களுக்கு சரணாலயம் வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு இந்த பறவைகள் விருந்து படைக்க உள்ளன.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. ஆர்க்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கும் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் இங்கு தங்கியிருக்கும். பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் செல்வது வழக்கம்.
இதில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து வரும் சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல் காகம், ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன்(ஆலா) இமாச்சல பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா(காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 247 வகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வருகிறது. இப்படி வந்து செல்லும் பறவைகளில் உள்ளான் வகையான ஆலா மற்றும் கிரீன்சான்ங், சாங்க்பிளவர் உள்ளிட்ட 6 வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும்.
மற்ற அனைத்து பறவைகளும் சீசன் காலத்தில் தங்கி மட்டுமே செல்லும். சைபீரியாவில் இருந்து இங்கு வருகை தரும் ஆலா பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் முதலாவதாக குஞ்சு பறவை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் உள்தூண்டுதலால் முதலில் செல்லும்.
பறவை ஆராய்ச்சியில் 41 ஆண்டு காலம் இந்த பகுதியில் ஈடுபட்டு வரும் மும்பை பறவை ஆராய்ச்சி கழகத்தினர், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் கோடியக்கரை என்று தெரிவித்தனர். இந்திய அரசால் கோடியக்கரையை ‘ராம்சார் சைட்’ என அறிவித்துள்ளது என்று 1976-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் பறவைகளை ஆராய்ச்சி செய்து அதன் கால்களில் வளையமிடும் பணியை மேற்கொண்டுவரும் மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி தெரிவித்தார்.
காடும் காடு சார்ந்த பகுதியும், கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயமும், பறவைகள் சரணாலயமும் ஒன்றாக அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சரணாலயத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பார்வையிட்டு வந்தனர்.
சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்கு வனத்துறையினர் தங்குமிடமும், உணவும், சுற்றிப்பார்ப்பதற்கு வழிகாட்டியும் ஏற்பாடு செய்கின்றனர். மேலும் பறவைகளை காணுவதற்கு பைனாகுலர் மற்றும் பார்வையிடுவதற்கான உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. படகு மூலம் சென்றும் பறவைகளை பார்வையிடலாம்.
பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் சொர்க்க பூமியாக திகழும் இந்த கோடியக்கரையில் ஆயிரக்கணக்கான மான்கள் துள்ளித்திரிவதும் கூட்டம், கூட்டமாக பறவைகள் சுற்றித்திரிவதும் கண்கொள்ளா காட்சியாகும். தற்போது கொரோனா பரவலின் காரணமாக பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு தடை விதித்துள்ளது. தடை நீங்கிய பின்பு பறவைகளின் அழகை கண்டு களிக்கலாம்.
இது குறித்து மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் கூறியதாவது:-
தற்போது கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைக்கடா, கடல் ஆலா ஆகியவை ஓரளவு வந்துள்ளது. பருவமழை நன்றாக இருந்தால் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும் என்றார்.

நாகை மாவட்ட கல்வி அலுவலக பெண் உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் வீதிகுளத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 55). இவர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன், மகள் ஆகியோர் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தநிலையில் ஜான்சிராணி மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
நேற்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டின் மின்விளக்கு எரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜான்சிராணி வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜான்சிராணி தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே 15 வயது சிறுமியை காணவில்லை என அந்த சிறுமியின் தந்தை கடந்த ஆகஸ்டு மாதம் கீழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருப்பூண்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரப்பிடாகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன் மகன் பிரசாத் (வயது 19) என்பதும், இவர் சிறுமியை அழைத்து சென்று அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரசாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்ட கல்வி அலுவலக பெண் உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் வீதிகுளத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 55). இவர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன், மகள் ஆகியோர் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தநிலையில் ஜான்சிராணி மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
நேற்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டின் மின்விளக்கு எரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜான்சிராணி வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜான்சிராணி தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பப்ளிக் ஆபீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 53) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பப்ளிக் ஆபீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 53) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் 2020-21-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் 01.10.2020-ல் முதற்கட்டமாக 149 நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரையும் விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் விவர நகலினை சமர்ப்பித்து, பதிவு செய்து கொள்ளலாம்.
17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லினை சன்னரக நெல் கொள்முதல் விலை 01.10.2020 முதல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,888 தொகையுடன், ஊக்கத்தொகை ரூ.70 ஆக கூடுதல் ரூ.1,958 மற்றும் பொதுரகம் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,868 தொகையுடன், ஊக்கத்தொகை ரூ.50 ஆக கூடுதல் ரூ.1,918 என்ற புதிய விலையில் விற்பனை செய்து அதற்குரிய தொகையினை தங்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு ஏதுவாக வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் நம்பரை நெல் கொள்முதல் நிலையங்களில் அளித்து பயனடையலாம்.
விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லிற்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்க தேவையில்லை. நெல் கொள்முதலில் ஏதேனும் தங்களுக்கு குறைபாடுகள் ஏற்படின் கீழ்கண்ட தொலைபேசி மற்றும் கைபேசி எண்ணில் வார நாட்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் நீங்கலாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து உடனுக்குடன் சரிசெய்து கொள்ளலாம். நாகை முதுநிலை மண்டல மேலாளர் கட்டுப்பாட்டு மையம் 04365-251843 என்ற எண்ணிற்கோ, நாகை துணை மேலாளர் 9843084370 என்ற செல்போன் எண்ணிக்கோ, மயிலாடுதுறை துணை மேலாளர்
9488553826 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கீழ சன்னதி தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சிறுமி அங்குள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது உணவகத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் (வயது 59), அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் (32), அவரது மனைவி துர்க்கா தேவி (26), விஜயன் (40) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் விஜயன், அரவிந்தன், துர்க்கா தேவி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்தநிலையில் நேற்று சண்முகசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை சீர்காழி அருகே செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி ஆதித்யா செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் கண்டித்ததையடுத்து மாணவி ஆதித்யா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை அபிராமி திடலில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், நவுசாத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உதயசந்திரன், மகாத்மா காந்தி நற்பணி மன்ற மாநில தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த தனியார் நிறுவன ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நல்லத்துக்குடி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தினர் முதலீடு திட்டத்தில் கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தனர். இதில் ஏராளமானோர் பணம் கட்டி சேர்ந்தனர். திட்டத்தில் பணம் செலுத்தி சில மாதங்கள் கழிந்த பின்னரும் பரிசு பொருட்கள் மற்றும் கமிஷன் தொகை எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த பலர், நிறுவன ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு கேட்டனர்.
அதற்கு அவர், கொரோனா ஊரடங்கால் காலதாமதம் ஆவதாக கூறி உள்ளனர். இந்நிலையில் நல்லத்துக்குடி பகுதியில் உள்ள ஒருவர் வீட்டுக்கு வந்த நிறுவனத்தின் ஏஜெண்டை பணம் செலுத்தியவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூரை சேர்ந்த அன்பழகன், ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
கொள்ளிடம் அருகே புதுப்பெண் கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). டீக்கடை வைத்துள்ளார். இவருக்கும், ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா(25) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ரஞ்சிதாவின் அண்ணன் வீரமணி, தனது சகோதரியின் சாவில் மர்மம் இருப்பதாக கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜேசை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.