என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது
வேதாரண்யம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கீழ சன்னதி தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சிறுமி அங்குள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது உணவகத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் (வயது 59), அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் (32), அவரது மனைவி துர்க்கா தேவி (26), விஜயன் (40) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் விஜயன், அரவிந்தன், துர்க்கா தேவி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்தநிலையில் நேற்று சண்முகசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






