search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை கலெக்டர்"

    நாகப்பட்டினத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகள் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 7 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 163 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு தலா ரூ.604 மதிப்புள்ள ஊன்று கோல், 2 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலாக ஈமச்சடங்கு உதவித் தொகை, 1 பயனாளிகளுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1500 வழங்க ஆணை மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி மையத்திற்கான மறுபதிவுச் சான்றிதழ் என 21 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரத்து 872 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த நெடுஞ்செழியன் என்பவரது வாரிசுதாரர் அனுசுயா என்பவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×