என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'நாகை வாசிக்கிறது' இயக்கத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் படித்த கலெக்டர் ஆகாஷ்
புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்த கலெக்டர்
- நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
- சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்கள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
பின்னர் அவரும் மாணவர்களோடு சேர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்தார்.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் மணி, விமலா, கண்ணன், தலைமை ஆசிரியை உலகாம்பிகை உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






