என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை அபிராமி திடலில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், நவுசாத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உதயசந்திரன், மகாத்மா காந்தி நற்பணி மன்ற மாநில தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






