search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் எரிந்து நாசம்"

    • குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையநம்பி. இவர் அனுமந்தன்பட்டி தீட்டிபாைற சாலையில் உள்ள வள்ளியம்மன் குளம் அருகே கயிறு மில் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் மில்லை பூட்டி சென்றனர். இந்த நிலையில் குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் தீபக் மற்றும் பாண்டி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்து றையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதும் சுமார் ரூ. 7½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பத் (வயது 65). இவரது மனைவி நியாய விலை கடையில் பணிபுரிந்து வருகிறார்.
    • இரும்பாலை போலீசாரும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை போராடி அணைத்தனர்.

    சேலம்:

    சேலம் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சம்பத் (வயது 65). இவரது மனைவி நியாய விலை கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று சம்பத் வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதியம் இவரது வீடு தீப்பற்றி எரிந்தது.

    இரும்பாலை போலீசாரும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த சொகுசு கார் மற்றும் குளிர்சாதன பெட்டி, டி.வி., மெத்தை, கம்ப்யூட்டர், பீரோ உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×