search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple pond"

    • கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பிரசித்தி பெற்ற வல்மீகநாதர்-பாகம்பிரியாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திங்கள், வியாழக்கிழமை தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு உள்ள வாசுகி தீர்த்தக்குளத்தில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தக்குளம் தூர்வாரபட்டுள்ளது.

    இருப்பினும் அதில் தேங்கி உள்ள தண்ணீர் பாசி படர்ந்து நீராட முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் நீராட தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குளத்தில் தேங்கி உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி புதிதாக மணல் பரப்பி குளத்தை சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ரங்கைய்யா பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி லட்சுமி. அந்த பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது.

    கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தனது தம்பிகள் மனைவிகளான லட்சுமி, பாலாமணி, அவரது மகன் சரண், லட்சுமி மகள் லாவண்யா ஆகியோர் வந்திருந்தனர்.

    நேற்று லட்சுமி, பாலாமணி, சரண், லாவண்யா ஆகியோர் அங்குள்ள கோவில் குளத்திற்கு சென்றனர்.

    லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். சிறுவன் சரண் கோவில் குளத்தின் கரையோரம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சரண் கோவில் குளத்தில் விழுந்து மூழ்கி உயிருக்கு போராடினான்.

    இதனை கண்ட அவரது தாய் பாலாமணி மகனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட லட்சுமி மற்றும் லாவண்யா இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.

    அருகில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்தவர்களை குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.

    குளத்தில் அதிக அளவு களிமண் உள்ளதால் சிறுவன் களிமண்ணில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று காலையில் சிறுவனின் உடலை தேடும் பணி நடந்தது.

    • ராமேசுவரத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
    • இந்த குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிடும் முன்பு குளங்களை தூர் வரி தண்ணீர் சேமிக்கும் வகையில் குளம் தூர் வாரும் பணியை நகர்மன்ற தலைவர் நாசர்கான் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் கண்ணன், துணைத்தலைவர் தட்சிணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தூர்வாரும் பணியின்போது தொழிலாளி நாராயணன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
    • 1 மணிநேரம் போராடி சேற்றில் சிக்கிய உடலை மீட்டனர்.

    சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் கோயில் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இருவர் ஈடுபட்டு வந்தனர். பணி நடந்து கொண்டிருக்கும் போது நாராயணன் என்பவர் குளத்தில் முழ்கியுள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக வண்ணாராப்பேட்டை தீயணைப்பு துறை மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குளத்தினுள் இறங்கி நாராயணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடி சேற்றினுள் சிக்கிய நாராயணின் உடலை மீட்டனர். கோயில் குளத்தை சுத்தப்படுத்த சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் குளத்தில் தவறி விழுந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • விபத்து குறித்து பிரம்மதேசம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் திருக்குளத்தில் இன்று காலை 8 மணி ஆண் ஒருவர் தவறி விழுந்தார் . இதனைக் கண்ட பொதுமக்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் குளத்தில் தவறி விழுந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் மரக்காணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்திற்குள் இறங்கி உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவில் தெப்பத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி மாசி மகத்தெப்பத்திரு விழா நடந்தது.

    அதன் பின்னர் தினமும் தெப்பத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து விளக்கேற்றுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல், தெப்பக்குளத்தில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் பெண் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மிதந்த பெண் யார்? அவவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது80). நேற்று மதியம் இவர் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமிதரிசனம் செய்வதற்கு முன்பு கோவில் குளத்தில் படிக்கட்டில் இறங்கி கால் கழுவ சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கோவிந்தம்மாள் குளத்தில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய கோவிந்தம்மாள் சிறிது நேரத்தில் குளத்தில் பிணமாக மிதந்தார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் கோவிந்தம்மாள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலயய்ன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செலவராஜ், ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவிடைமருதூரில் கோவில் குளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், குளத்தில் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி திருவிடை மருதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குளத்தில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொச்சி அருகே கோவில் குளத்தில் பள்ளி வேன் பாய்ந்து 2 குழந்தைகள், ஆயா பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).

    இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.

    நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.

    வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 6 குழந்தைகளை மீட்டனர். இதனிடையே கொச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் மூழ்கி கொண்டிருந்த டிரைவர் அனில்குமாரை மீட்டனர்.



    இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    ×