என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மதுரையில் இருந்து நாகைக்கு பஸ்சில் வந்த போது மூதாட்டியிடம் 19 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்த உச்சா தேவர் மனைவி ஜெயலட்சுமி (வயது71). இவர் கடந்த 12-ந்தேதி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றார். பின்னர் மதுரையில் இருந்து மறுநாள் 13-ந்தேதி பஸ் மூலம் நாகைக்கு வந்தார். அப்போது தனது பையில் 19 பவுன் நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 19 பவுன் நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி ஜெலட்சுமியிடம் இருந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஜெயலட்சுமி நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

    மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டிராஜா தயாரித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நாகை:

    நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 13ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 23 மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட அவர்களை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் இன்று மீண்டும் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர்.
    தாராபுரம்:

    கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் சிக்கண்ணாஅரசு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். 

    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணமான ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம்  எழுப்பினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இதேப்போல் - தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடினர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கோவை பள்ளி மாணவி தூக்கிட்டு இறந்ததற்கு நீதி கேட்டு போராட வந்துள்ளோம் என கூறியதை அடுத்து போலீசார் தாராபுரம் அண்ணா சிலை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தெரிவித்தனர். 

    அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு கூடி பதாகை ஏந்தி தூக்கிலிட்டு இறந்த மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் ,  

    பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக என தனி சட்டம் கொண்டு வர வேண்டும். மாணவி சாவில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி உடனடியாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர்.  

    தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், செல்லையா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
    ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் பைக்கில் வந்தவரின் செல்போனை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாஞ்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர் கடந்த 10ஆம் தேதி விண்ணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர் வெங்கடேசனை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் வாணியம்பாடி பெருமாள்பட்டு சேர்ந்த பாலாஜி வயது (20) என்பதும் வெங்கடேஷிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
    கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே தென்கரை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ராகினி. இவர்களுடைய மகள் மீனா(வயது 28). இவருக்கும், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் வடக்குதெருவை சோ்ந்த கலியமூர்த்தி மகன் முருகவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அவரது பெற்றோர் சமரசம் செய்து அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து மீனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோகூருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மீனாவின் உடல் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீனாவின் தாயார் ராகினி கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். சமையல் தொழிலாளி. இவரது மகள் பொன்தாரணி (வயது 17).

    இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த பொன்தாரணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உக்கடம் போலீசார் மாணவியின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சில மாணவிகளின் உறவினர்களின் பெயர்களையும், ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என மாணவி எழுதி இருந்தார்.

    மாணவி பொன்தாரணிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் நிறைமதி புகார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    எனது மகள் பொன்தாரணி முதலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தது. அப்போது இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர், பொன்தாரணியிடம் வீடியோவில் தவறாக பேசி உள்ளார். அந்த விவரத்தை பொன்தாரணி எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    நேரடி வகுப்பு தொடங்கிய பிறகு ஒருநாள் மாலை வீடு திரும்புவதற்காக பள்ளிக்கு வெளியே பொன்தாரணி காத்திருந் திருக்கிறாள். அப்போதும் அந்த ஆசிரியர் வந்து உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று அழைத்து வந்திருக்கிறார்.

    மற்றொரு நாள் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி அவர் அழைத்து இருக்கிறார். அதனை நம்பி பள்ளிக்கு சென்ற எனது மகளை அந்த ஆசிரியர் தனியாக அழைத்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது மகள் அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டாள்.

    அதன்பிறகு ஆண்களை பார்த்தாலே ஒருவித அச்ச உணர்வுடன் இருந்தாள். ஆசிரியர் செய்த இழிசெயலை நினைத்து மன வேதனையுடன் காணப்பட்டாள். இந்த விவரங்களை எனது மகள், தன்னுடன் படித்த எங்கள் பகுதியைச் சேர்ந்த சக மாணவரிடம் தெரிவித்து அழுது இருக்கிறாள். அந்த மாணவர் மூலமே எங்களுக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

    பின்னர் நாங்கள் பொன் தாரணியை, அந்த பள்ளியில் இருந்து மாற்றி மாநகராட்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். ஆனால் ஆசிரியர் செய்த அத்துமீறலை மறக்க முடியாமல் அவள் வேதனையுடன் காணப்பட்டாள். நேற்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டாள். எனவே மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக ஆசிரியரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் தன்னுடன் படித்த மாணவிகளின் உறவினர்கள் பெயரையும் கடிதத்தில் மாணவி குறிப்பிட்டு இருந்தார். அவர்களாலும் மாணவி பாதிக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    நாகையில் வெளுத்து வாங்கும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, வெளுத்து வாங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விடிய, விடிய சாரல் மழை பெய்தது. நாகை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று காலை சாரல் மழையாக பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு, சிவசக்தி நகர், நாகை நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

    நகரின் முக்கிய சாலைகளில் ஆறாக ஓடிய மழைநீரில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர். குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் வாளியை கொண்டு இறைத்து வெளியே ஊற்றினர்.

    மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தண்ணீர் வடிய வழியின்றி உள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம், கோடிக்கரை அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, செம்போடை, கரியாப்பட்டினம், மருதூர், வாய்மேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதாரண்யம் தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பெரும்பாலான கடைகள் திறக்கவில்லை.

    தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி மானாம்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமலைராஜன் ஆற்றில் அதிக அளவில் தண்ணீரில் செல்கிறது. இதனால் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் இருந்தது.

    உடனடியாக அதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து திருமருகல் உதவி பொறியாளர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறையினர் கரை அரிப்பை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மஞ்சள் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. அதனை உடனடியாக ஊராட்சி மன்றம் சார்பில் சரி செய்யப்பட்டது. கொண்டாங்காடு பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தன. உடனே மின்சாரத் துறை பணியாளர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதேபோல மருதூர் ஊராட்சி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன. வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் 15 அடிக்கும் ஆழமாக உள்ள தரை மட்ட கிணறுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.மேலும் ஏரி, குளங்கள் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :-

    வேதாரண்யம் 149, தலைஞாயிறு 112, திருப்பூண்டி 91, நாகை 14.4,
    டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    கோவை:

    கோவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இந்த மாத தொடக்கமான 1-ந் தேதியில் இருந்து கடந்த 8-ந் தேதி வரை மட்டும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அவர்கள் வீடுகள், தனியார் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள பாழடைந்த தொட்டி மற்றும் தேங்காய் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா? என ஆய்வு செய்து, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டெங்குவை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர அதிகாரிகளும் தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிய அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை, சுற்றுப்புறத்தை, நீர் தேங்குவதை தடுப்பதன் வாயிலாக டெங்குவை தடுக்கலாம் என்றனர்.
    நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் அலங்கார வாசல் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 358-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,513 பேர் உயிரிழந்துள்ளனர். 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 168-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 592 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். 318 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×